ஸ்ட்ரீமரை காதலியாக நினைத்துக்கொண்டு பரிசுகளை வாரி வழங்கிய சிங்கபூரர்கள் – காதல் மோசடி என காவலில் புகார்

lovescam streamer

இரண்டு சிங்கபூரர்கள் S$30,000 & S$3,000 என தங்கள் காதலியாகக் கருதும் ஒரு ஸ்ட்ரீமருக்கு பரிசுகள் வாங்க பணத்தைச் செலவழித்த பிறகு தங்களை காதல் மோசடி செய்துவிட்டதாக போலீசில் புகார் அளித்தனர்.

41 வயதான ஒருவர், பரிசுகளுக்காக மொத்தம் S$30,000 செலவிட்டதாகவும் . 32 வயதான மற்றொருவர், S$3,000 செலவிட்டதாகவும் கூறியுள்ளனர். அந்த ஸ்ட்ரீமர் மலேசியாவைச் சேர்ந்தவர் என்றும் தற்போது தைவானில் உள்ளார் என்றும் கூறப்படுகிறது.

இதில் ஒருவர் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஸ்ட்ரீமரைப் பின்தொடர்ந்து அவரது ரசிகரானார், பின்னர் ஸ்ட்ரீமர் தனது ரசிகர்களுடன் தொடர்பு கொள்ளத் தொடங்கினார், ஜனவரி 14, 2022 அன்று ஸ்ட்ரீமரிடமிருந்து ரிப்ளை கிடைத்தபோது மகிழ்ச்சியடைந்ததாகவும்.

அவர்கள் கிட்டத்தட்ட தினசரி அடிப்படையில் பேச தொடங்கியதாகவும் அவர் கூறினார். மேலும் தனது நேரடி ஸ்ட்ரீம்களின் போது தனக்கு ஆதரவளிக்குமாறும் இவரிடம் கேட்டுள்ளார். இந்த ஜோடி மார்ச் 1 அன்று “டேட்டிங்” செய்யத் தொடங்கி, மாதத்தின் ஒவ்வொரு 14வது நாளிலும் பரிசுகளை தந்துள்ளார்.

அந்த ஸ்ட்ரீமரின் மற்ற ரசிகர்கள், அவரை மே 2022 இல் தொடர்பு கொண்டபோது தானும் அவர்களைப் போல ஏமாற்றமடைந்ததை உணர்ந்துள்ளார். அவர்கள் ஒன்றாக காவல் நிலையத்தில் புகார் அளிக்க திட்டமிட்டு, வழக்கு பதிவு செய்ய காவல் நிலையம் சென்றனர. தங்கள் குற்றச்சாட்டுக்களை விசாரிக்க கோரினர்.