உயிரைக் காக்கும் நாய்! – ரத்தத்தில் சர்க்கரை குறைந்தால் சேவை செய்யும் செல்ல நாய்;இப்படிதான் பயிற்சி கொடுக்கணும்!

dog love-diabetes patient needs
சிங்கப்பூரில் Stella Chew என்ற பெண் குறைந்த ரத்தச் சர்க்கரையினால் பாதிக்கப்பட்டிருக்கிறாள்.அவளின் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறையும் போது,பயிற்சியளிக்கப்பட்டு வளர்த்து வந்த Butter என்ற நாய்,அவளது முகத்தில் நக்கி சர்க்கரை அடங்கிய உணவை எடுத்துக்கொள்ளுமாறு தெரிவிக்கும்.
இரத்தச் சர்க்கரைக் குறைவு ஏற்படத் தொடங்கும் போது வெளியிடும் தனித்துவமான வாசனையை அடையாளம் காண நாய்க்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.பயிற்சியளிக்கப்பட்ட இந்த நாய் உயிர்களைக் காப்பாற்றும் திறன் கொண்டது.

ரத்தத்தில் சர்க்கரையின் அளவு குறையும்போது உடல்முழுவதும் வியர்த்து டுக்கையில் இருந்து எழவும் முடியாமல்,தேவையான சர்க்கரையையும் எடுக்க முடியாமல் மோசமான நிலைக்கு நோயாளிகள் தள்ளப்படுவார்கள்.

ரத்தத்தில் சர்க்கரை குறையும் போது உடல்கள் சில வாசனையை உருவாக்குகின்றன.மோப்பசக்தி நிறைந்த நாய் வாசனையை அடையாளம் கண்டு உதவ பயிற்சி கொடுக்கப்படுகிறது.
நோயாளி இரத்தச் சர்க்கரைக் குறைவை அனுபவிக்கும் போது உமிழ்நீர் மாதிரிகளைச் சேகரித்து ஒரு பையில் உறைய வைக்க வேண்டும். நாயின் வாசனையை அடையாளம் காண பயிற்சி அளிக்க பை பயன்படுத்தப்படுகிறது. நாய் வாசனையில் ஆர்வம் காட்டும் நேரம் அதற்கு உபசரிப்பு வழங்க வேண்டும்.
இந்தப் பயிற்சி கொடுக்க ஒரு நாளைக்கு ஐந்து நிமிடங்களுக்கும் குறைவான நேரம் மட்டுமே எடுக்கும்.நாய் ஒரு முறை வாசனையைக் கண்டறிந்து செயல்பட்டால்,அதற்கு உணவு கிடைக்கும் என்பதை அறியும்.எனவே,அது வாசனையைப் பழகும் வரை பயிற்சி கொடுக்க வேண்டும்.