சிங்கப்பூரில் மதிய நேரம் ஆங்காங்கே பெய்த மழை – “குழு குழு ” !

low temperature

சிங்கப்பூரின் சில பகுதிகளில் இன்று  மதியம் குளிர்ந்த வானிலை காணப்பட்டது. மேலும் மேற்கு, வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று சிங்கப்பூர் வானிலை ஆய்வு மையச் சேவைகள் (MSS) இணையதளத்தின் 24 மணி நேர முன்னறிவிப்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

 

இன்று பிற்பகல் 3 மணியளவில் பதிவான வெப்பநிலைகள்:-

  • ஜூரோங் வெஸ்ட் 22.4 ° C
  • சோவா சூ காங் 6 ° C
  • அட்மிரால்டி 23.1°C
  • ஆங் மோ கியோ 3°C
  • பயா லெபார் 24°C
  • க்ளெமெண்டி 24.8°C

 

ஆகஸ்ட் 2022 இன் முதல் இரண்டு வாரங்களுக்கு ஈரமான வானிலை இருக்கும் என  MSS முன்னறிவித்தது. ஜூலை இரண்டாம் பாதியில் தென்மேற்கு பருவமழை நிலவுவதே இந்தக ஈரமான வானிலைக்கு காரணம் ஆகும் . சிங்கப்பூரின் சில பகுதிகளில் பெரும்பாலான நாட்களில் காலை முதல் பிற்பகல் வரை குறுகிய கால இடியுடன் கூடிய மழை பெய்யும் என்றும் ஏற்கனவே  கணிக்கப்பட்டிருந்தது. வரும் ஒன்று அல்லது இரண்டு நாட்களில் பரவலாக மிதமானது முதல் பலத்த இடியுடன் கூடிய மழை பெய்யும் என்றும் MSS கணித்துள்ளது. மொத்த மழைவீழ்ச்சியானது தீவின் பெரும்பாலான பகுதிகளில் ஆகஸ்ட் முதல் பதினைந்து நாட்களில் சராசரியை விட அதிகமாக இருக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.