குறைந்த சம்பளம் பெறும் வெளிநாட்டு ஊழியர்கள் எதிர்கொள்ளும் 3 முக்கிய பிரச்சனைகள் – அதற்கான தீர்வுகள்!

சிங்கப்பூர் வெளிநாட்டு ஊழியர்
(PHOTO: Roslan Rahman/ AFP /Getty Images)

சிங்கப்பூரில் குறைந்த சம்பளம் பெறும் வெளிநாட்டு ஊழியர்கள் மூன்று முக்கிய பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர் .

1. ஊழியர்கள் தங்களுக்கு சாதகமாக வேலை நடக்க தவறு செய்யும் முதலாளிகளுக்கு சட்டவிரோதமாக பணம்/பொருள் கொடுப்பது.

2. கோவிட்-19 காரணமாக தங்கும் விடுதிகளில் நீண்ட காலம் அடைந்து இருப்பது.

3. அதிக வேலையின் காரணமாக ஏற்படும் பெருஞ்சோர்வு.

“இது உனக்கு பிடிக்குமா..?” சிறுமியிடம் தன் உறுப்பை காட்டிய வெளிநாட்டு இளைஞருக்கு சிறை

முதல் தீர்வு:

முதலாவதாக, முதலாளிகளின் சட்டவிரோத செயல்களை ஊழலைப் போலவே தீவிரமாகக் கருதி அபராதங்களை கடுமையாக அதிகரிக்க வேண்டும்.

வெளிநாட்டு ஊழியர்களை நியாயமற்ற முறையில் நடத்தும் முதலாளிகளிடம் இருந்து ஊழியர்கள் இலகுவாக வேறு நிறுவனத்துக்கு மாற அனுமதிக்கும் நிரந்தரத் திட்டத்தை உருவாக்க வேண்டும்.

இரண்டாம் தீர்வு:

இரண்டாவதாக, தடுப்பூசி மற்றும் பூஸ்டர் போடப்பட்ட வெளிநாட்டு ஊழியர்களை வழக்கம் போல சமூகத்துக்கு சென்றுவர அனுமதிக்க வேண்டும்.

மூன்றாம் தீர்வு:

மூன்றாவதாக, அனைத்து வெளிநாட்டு ஊழியர்களும் ஒரு மாதத்திற்கு ஒரு ஓய்வு நாளைப் பெறுவதை உறுதிசெய்வது.

அதை ஊழியர்கள் வேலை செய்து ஈடுகட்டாத அளவு இருக்கும் படி உறுதி செய்தல்.

அதிகபட்சமாக வேலை பார்க்கும் நேரமும் வரையறுத்து கட்டாயமாக்கப்பட வேண்டும்.

அதே போல ஊழியர்கள் ஓய்வு நாளில் வேலை செய்தால் அவர்களுக்கு இழப்பீடு வழங்கப்பட வேண்டும்.

நாடாளுமன்ற உறுப்பினர் லூயிஸ் இங் (Louis Ng) ஒவ்வொரு பிரச்சனைக்கும் தீர்வுகளை முன்னதாக சொன்னார், அதன் தொகுப்பு இதுவாகும்.

இலங்கை நாட்டவர் உட்பட இரு வெளிநாட்டவர் மீது தாக்குதல் நடத்திய இருவருக்கு சிறை