குறைவாக சம்பளம் பெரும் ஊழியர்களுக்கு ஒரு முறை மொத்தத் தொகை வழங்க முதலாளிகளுக்கு பரிந்துரை

All foreigners can automated lanes singapore travel
Pic: Foreign workers Singapore risk

சிங்கப்பூரில் ஊழியர்களுக்கு “ஒரு முறை மொத்தத் தொகை” வழங்குவதை முதலாளிகள் மதிப்பீடு செய்ய வேண்டும் என்று தேசிய சம்பள மன்றம் (NWC) இன்று கூறியது.

அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவுகளை ஊழியர்கள் சமாளிக்க இது உதவும் என மன்றம் குறிப்பிட்டது.

சிங்கப்பூருக்கு வந்த வெளிநாட்டினர் ஐவரிடம் 3 கிமீக்கு S$100 கட்டணம் வசூல் செய்த டாக்ஸி

கடந்த 10 ஆண்டு கால நிலவரப்படி, தனது வருடாந்திர வழிகாட்டுதல்களில் இந்த பரிந்துரையை NWC வழங்கியது இதுவே முதல் முறை.

அதாவது குறைந்த மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட ஊழியர்களுக்கு அந்த பெரிய தொகை வழங்குவது குறித்து பரிசீலிக்குமாறு முதலாளிகளிடம் NWC கேட்டுக்கொண்டுள்ளது.

இந்த வழிகாட்டுதல்கள் அரசாங்கத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக சொல்லப்பட்டுள்ளது.

மேலும், வரும் டிசம்பர் 1 முதல் அடுத்த ஆண்டு 2024 நவம்பர் 30 வரையிலான காலகட்டம் அதற்கு கொடுக்கப்பட்டுள்ளது.

மாத ஊதியமாக $2,500 வரை சம்பாதிக்கும் ஊழியர்களுக்கு குறைந்தபட்சம் 5.5 சதவீதம் முதல் 7.5 சதவீதம் வரை ஊதிய உயர்வை வரும் ஆண்டில் கொடுக்க வேண்டும் என்றும் மன்றம் கூறியது.

வெளிநாட்டு ஊழியர்களுக்கான புதிய நடைமுறைகள்.. வேலையிடங்களில் முறையாக பின்பற்றப்படுகிறதா?