சிங்கப்பூரில் ECP நடைபாதை மற்றும் சைக்கிள் பாதையில் கார் ஓட்டிய நபர் – Npark விசாரனை..!!

LTA takes action against man who drove car on ECP footpath and cycling path

வாகன ஓட்டுநர் ஒருவர் தனது நிசான் சன்னியை East Coast Park-ல் ஒரு நடைபாதை மற்றும் சைக்கிள் பாதையில் ஓட்டிச் சென்ற வழக்கை தேசிய பூங்காக்கள் வாரியம் (NParks) விசாரித்து வருகிறது. அதே நேரத்தில் தரைவழிப் போக்குவரத்து ஆணையம் (LTA) வாகனத்தின் உரிமையாளருக்கு எதிராக “ஒழுங்குமுறை நடவடிக்கைகளை” எடுக்க ஆரம்பித்துள்ளது.

பேஸ்புக் பயனர் கேப் லிம் ஒரு பதிவில், கடந்த வெள்ளிக்கிழமை (அக்.18) காலை 7.30 மணியளவில் பூங்காவில் ஒரு நடைபாதை மற்றும் சைக்கிள் பாதையில் கருப்பு நிசான் சன்னியைப் பார்த்ததாகக் கூறினார். அவர் காரின் புகைப்படங்களையும், One.Motoring வலைத்தளத்தின் ஸ்கிரீன் ஷாட்டையும் பகிர்ந்து கொண்டார்.

ஊடக கேள்விகளுக்கு பதிலளித்த NParks, இந்த சம்பவம் குறித்து அறிந்திருப்பதாகவும், அது குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும் கூறியுள்ளது.

சிங்கப்பூரின் பூங்காக்கள் மற்றும் மரங்கள் சட்டத்தின் கீழ், ஒரு பூங்காவில் மோட்டார் வாகனத்தை அனுமதியின்றி ஓட்டுவது குற்றமாகும். மேலும் இதற்காக குற்றவாளிகளுக்கு $5,000 வரை அபராதம் விதிக்கப்படலாம், என்றும் சிங்கப்பூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.