இது நல்லாருக்கே! நன்றாக விமானத்தில் நடந்து கொண்டன!- உல்லாசமாக விமானத்தில் பறந்த நாய்க்குட்டிகள்!

lucky dogs fly on sia flight
சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்தில் இரண்டு நாய்க்குட்டிகள் சொகுசாக வணிக வகுப்பில் பயணித்ததை விமானத்தில் பயணித்த பயணிகள் அனைவரும் ரசித்தனர்.சான் பிரான்சிஸ்கோவிலிருந்து சிங்கப்பூருக்கு பறந்த விமானத்தில் நாய்க்குட்டிகள் பயணிக்கும் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை அவற்றின் உரிமையாளர் டாமி சூரிவோங் முகநூலில் பகிர்ந்துள்ளார்.
உரிமையாளர் புதிதாக தாய்லாந்திற்கு இடம்பெயர்ந்ததால் நாய்களையும் அழைத்துவர வேண்டியிருந்ததாகக் கூறினார்.நாய்கள் சுமார் 17 மணி நேர பயணம் செய்தன.உரிமையாளருடன் இரண்டு நாய்களும் வசதியாக அமர்ந்திருந்ததை புகைப்படத்தில் காணலாம்.பயணத்தில் பெரும்பாலும் அரவணைத்து உறங்கிக் கொண்டிருந்ததாகவும் உரிமையாளர் கூறினார்.

பொதுவாக விமான அறையில் நாய்கள் போன்ற செல்லப்பிராணிகள் அனுமதிக்கப்படுவதில்லை.ஆனால்,இந்த இரண்டு நாய்களும் விதிவிலக்குகள்.SIA விதிமுறையின்படி,ஒரு சிறிய நாய் அதன் உரிமையாளர் மடியில் உட்கார்ந்து பயணிக்கலாம், அதேசமயம் பெரிய நாய்கள் பயணிகள் இருக்கைக்கு முன் கேபின் தரையில் உட்கார வேண்டும்.
மேலும்,நாய்க்கு அடியில் ஈரப்பதத்தை உறிஞ்சும் துணி விரிக்கப்பட வேண்டும்.இரண்டு நாய்களுக்கும் தேவையான சிறுநீர் மற்றும் மலம் கழிக்கும் பைகள்,துடைப்பான்கள் போன்றவை எடுத்துச் செல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.
விமானத்தின் நிபந்தனைகள் மற்றும் புறப்பாடு, போக்குவரத்து மற்றும் இலக்கு நாடுகளின் விதிமுறைகளுக்கு இணங்கும் வரை பயணிகள் தங்கள் செல்லப்பிராணிகளுடன் பயணிக்கலாம்.