லக்கி பிளாசாவின் ரகளை: பலருக்கு செக் – மடக்கிய போலீஸ்

Facebook/Singapore Incidents

லக்கி பிளாசாவின் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை (மார்ச் 19) சண்டை வெடித்ததால் அது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலானது. இதனை அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவர்களை கைது செய்தனர்.

இந்த சம்பவத்தில் 31 முதல் 63 வயதுக்கு உட்பட்ட ஐந்து ஆண்கள் மற்றும் 41 மற்றும் 44 வயதுடைய இரண்டு பெண்களுக்கு தொடர்பு இருந்ததாக போலீசார் கூறியுள்ளனர்.

இந்நிலையில், பாதிக்கப்பட்ட இரண்டு பெண்களும் இரண்டு ஆண்களும் சுயநினைவுடன் மருவத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டனர்.

மேலும், 52 வயதுடைய நபர் ஒருவரும் தகராறில் ஈடுபட்டதற்காக பின்னர் கைது செய்யப்பட்டார்.

மேலும் 31 மற்றும் 37 வயதுடைய இரண்டு ஆண்கள் வன்முறை மற்றும் பொது இடத்தில் தொந்தரவு செய்ததற்காக கைது செய்யப்பட்டனர்.

விசாரணைகள் நடந்து வருவதுடன், 55 மற்றும் 63 வயதுடைய இரு பெண்களும் இரண்டு ஆண்களும் போலீசார் விசாரணைகளுக்கு உதவி வருகின்றனர்.