பொதுமக்களுக்காகத் திறக்கப்பட்டது இஸ்தானா அதிபர் மாளிகை!

Photo: Singapore President Official Facebook Page

“சீனப் புத்தாண்டைக் கொண்டாடும் வகையில் சிங்கப்பூரில் உள்ள இஸ்தானா அதிபர் மாளிகை பொதுமக்களுக்காக வரும் பிப்ரவரி மாதம் 5- ஆம் தேதி திறக்கப்படுகிறது. எனவே, இஸ்தானாவிற்கு வர விரும்புவோர்கள் இணையதளம் மூலம் நுழைவுச்சீட்டுகளுக்கு (Tickets) விண்ணப்பிக்க வேண்டும். நுழைவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்கக் கட்டணம் எதுவும் செலுத்த வேண்டியதில்லை; முற்றிலும் இலவசம்” என்று இஸ்தானா அதிபர் மாளிகை தனது அதிகாரப்பூர்வ செய்திக் குறிப்பில் தெரிவித்திருந்தது.

சட்டத்திற்கு புறம்பான முறையில் மருந்து விநியோகம்: லிட்டில் இந்தியா வட்டார மெடிக்கல் நிர்வாகிக்கு 48 வாரம் சிறை!

https://tinyurl.com/lnyioh22 என்ற இணையதள பக்கத்திற்கு சென்று நுழைவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. நுழைவுச்சீட்டுக்கான விண்ணப்பப்பதிவு பிப்ரவரி 24- ஆம் தேதி அன்று காலை 10.00 AM மணிக்கு தொடங்கிய நிலையில், பிப்ரவரி 25- ஆம் தேதி அன்று காலை 10.00 AM மணிக்கு நிறைவடைந்தது.

இந்த நிலையில் இன்று (05/02/2022) காலை இஸ்தானா மாளிகை பொதுமக்களுக்காகத் திறக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து இணையதளத்தில் முன்பதிவு செய்தவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை இஸ்தானா அதிபர் மாளிகையைச் சுற்றிப் பார்த்தனர். அத்துடன் புகைப்படங்களையும் எடுத்துக் கொண்டனர்.

குளிர்கால ஒலிம்பிக் போட்டியின் தொடக்க விழாவில் கலந்துக் கொண்ட சிங்கப்பூர் அதிபர்!

இஸ்தானா அதிபர் மாளிகைக்கு வந்த பொதுமக்கள் அரசின் கொரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை முறையாகப் பின்பற்றினர். அனைவரும் முகக்கவசம் அணிந்தபடி, சமூக இடைவெளியுடன் இஸ்தானா மாளிகையைச் சுற்றிப் பார்த்தனர்.

குறிப்பாக, பொதுமக்கள் பலரும் தங்களது குடும்பத்தினருடன் இஸ்தானா மாளிகைக்கு வந்திருந்ததை நம்மால் காண முடிந்தது. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரின் முகத்திலும் புன்னகையைக் காண முடிந்தது.

சீன வெளியுறவுத்துறை அமைச்சருடன் சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சர் சந்திப்பு!

கொரோனா பரவல் காரணமாக, உணவு விற்கும் வாகனங்களுக்கு (Food Trucks) அனுமதி வழங்கப்படவில்லை. மாளிகையில் வெளிப்புறத் தோட்டங்களுக்கு (Outdoor Gardens) மட்டுமே பொதுமக்கள் செல்ல அனுமதி அளிக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.