இந்த புற்றுநோய் இப்படியா! – ஆய்வுக்காக இவ்வளவு நிதியை ஒதுக்கியுள்ள சிங்கப்பூர் அரசாங்கம்

The Catalist-listed cancer diagnostics company has launched a rapid test kit for Covid-19
The Catalist-listed cancer diagnostics company has launched a rapid test kit for Covid-19

சிங்கப்பூரில் நுரையீரல் புற்றுநோய் தொடர்பான புதிய ஆய்வுக்கு மில்லியன் வெள்ளியை அரசாங்கம் ஒதுக்கியுள்ளது. இந்த ஆய்வின் மூலம் நுரையீரல் புற்றுநோய்க்கான சிகிச்சை முறைகளைக் கண்டறிவது நோக்கமாகும். சிங்கப்பூர் தேசியப் புற்றுநோய் மையம் இந்த ஆய்வை வழிநடத்தும் ஐந்து ஆண்டுகள் ஆய்வானது மேற்கொள்ளப்படும்.

சிங்கப்பூரில் நுரையீரல் புற்றுநோயினால் அதிக அளவில் ஆண்கள் மரணிக்கின்றனர். பெண்களை மரணமடையச் செய்யும் நோய்களில் ஐந்தாவது நோயாக இது உள்ளது.நுரையீரல் புற்றுநோய் மற்ற புற்று நோய்களில் இருந்து மாறுபட்டது. நுரையீரல் உடலின் உள்ளே அமைந்திருப்பதால் இந்த வகை புற்றுநோயை ஆரம்பகட்டத்தில் கண்டறிவது சிரமம் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த ஆய்வின் மூலம் நுரையீரல் புற்றுநோயாளிகளின் உடலில் ஏற்படும் மாற்றங்கள் அல்லது புற்றுநோய் கட்டியுடன் தொடர்புடைய உடல் மாற்றங்களை ஆய்வாளர்கள் அடையாளம் காண முயல்வார்கள். பின்னர் நோயாளிக்கு தனிப்பட்ட சிகிச்சை முறையை வடிவமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

கீமோதெரபி எனும் பாரம்பரிய புற்றுநோய் சிகிச்சை முறை இதற்கு பலனளிப்பதில்லை. மேலும் அறிகுறிகள் தெரியும் போதே நோய் முற்றிய நிலையை அடைந்திருக்கும் என்றும் சிங்கப்பூர் பொது மருத்துவ மனையின் மூத்த மருத்துவ வல்லுநர் பேராசிரியர் பியர்ஸ் சோ கூறினார்.

நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் இம்யுனோதெரபி சிகிச்சை முறைதான் நுரையீரல் புற்றுநோய்க்கு சிறந்த சிகிச்சை முறையாக கருதப்படுகிறது இதன் மூலம் 60 விழுக்காட்டு நோயாளிகள் மட்டுமே பயனடைகின்றனர்.