மெக்காவிற்கு பாதுகாப்பாக சென்ற சிங்கப்பூர் இஸ்லாமியர்கள் – சவூதி அரேபியாவில் அனுமதிக்கப்பட்டார்களா?

5 mosques to offer 250 spaces each for Friday prayers from Dec 11
(Photo: AFP/Roslan Rahman)

ஒவ்வொரு மதத்திலும் புனிதப் பயணம் மேற்கொள்வது இயல்பான ஒன்றுதான்.இறைவனைக் காண பக்தர்கள் மேற்கொள்ளும் பயணம் புனித யாத்திரையாகும்.அவ்வாறு இஸ்லாமியர்களின் புனிதத்தலங்களில் ஒன்றான மெக்காவிற்கு சிங்கப்பூரைச் சேர்ந்த 900 இஸ்லாமியர்கள் புனிதயாத்திரை மேற்கொண்டனர்.

புனித யாத்திரை மேற்கொண்ட அனைத்து சிங்கப்பூர் இஸ்லாமியர்களும் சவூதி அரேபியாவின் அராபா பகுதியைப் பாதுகாப்பாகச் சென்றடைந்துள்ளதாக முஸ்லிம் விவகாரங்களுக்கான அமைச்சர் மசகோஸ் தெரிவித்துள்ளார்.அவர்களுள் Covid-19 தொற்றுக்கு ஆளான 30 பேரும் அடங்குவர்.தொற்றினால் பாதிக்கபட்டிருந்தாலும் சவூதி அரேபிய அதிகாரிகள் நாட்டிற்குள் நுழைய அவர்களை அனுமதித்தனர்.

அவர்கள் தொற்றிலிருந்து குணமடைந்தவர்கள் அல்லது நோய்க்கான அறிகுறிகள் அதிகம் இல்லாதவர்கள் போன்றவை நாட்டிற்குள் நுழைய அனுமதித்ததற்கான காரணங்கள் என்று அமைச்சர் மசகோஸ் சவூதி அரேபிய ஊடகங்களிடம் கூறினார்.ஒருவரின் உடல்நிலை மட்டும் சற்று மோசமாக இருந்ததாக அவர் குறிப்பிட்டார்.

புனித ஹஜ் யாத்திரை சடங்குகளை மேற்கொள்ள சவூதி அரேபிய அதிகாரிகள் அவருக்கு உதவுவர் என்று தெரிவித்தார்.ஒவ்வொரு ஆண்டும் சிங்கப்பூரிலிருந்து ஹஜ்ஜுக்கு புனிதப் பயணம் மேற்கொள்ளும் குழுவிற்கு ஒருவர் தலைமை தாங்குவார்.இந்தாண்டு சமுதாய குடும்ப மேம்பாட்டு அமைச்சரும்,சுகாதார இரண்டாம் அமைச்சருமான திரு.மசகோஸ் தலைமை தாங்குகிறார்.

புனிதப் பயணம் மேற்கொண்ட அனைவரும் முகக்கவசம் அணிந்து பேசிப்பழகுவதைக் குறைத்துக் கொண்டு தங்களின் உடல்நலனைக் கவனித்துக் கொண்டதாக அமைச்சர் மசகோஸ் குறிப்பிட்டார்.