மதுரை, சிங்கப்பூர் இடையேயான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான சேவை குறித்த விரிவான தகவல்!

Photo: Air India Express Official Twitter Page

மதுரை மற்றும் சிங்கப்பூர் இடையே ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் (Air India Express), இரு மார்க்கத்திலும் தொடர்ந்து நேரடி விமான சேவைகளை வழங்கி வருகிறது. இந்த வழித்தட விமான சேவை குறித்து விரிவாகப் பார்ப்போம்.

செங்காங்கில் தீ… இருவர் பலி – 150 பேர் வெளியேற்றம்

மதுரையில் இருந்து சிங்கப்பூருக்கு IX 684 என்ற விமானத்தையும், சிங்கப்பூரில் இருந்து மதுரைக்கு IX 683 என்ற விமானத்தையும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் தொடர்ந்து இயக்கி வருகிறது. எனினும், இந்த வழித்தட விமான சேவை தினசரி விமான சேவை கிடையாது. வாரத்திற்கு செவ்வாய்க்கிழமை, வியாழன்கிழமை, சனிக்கிழமை ஆகிய மூன்று மட்டும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் விமான சேவையை வழங்கி வருகிறது.

கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பொங்கல் உள்ளிட்ட பண்டிகைகள் அடுத்தடுத்து வரவுள்ள நிலையில், இந்த வழித்தட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான சேவைக்கான விமான பயண டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

வெளிநாட்டு ஊழியர்கள் உஷார்: பாதுகாப்புடன் இருங்கள்… குறிப்பாக work permit ஊழியர்கள்

இது தொடர்பான மேலும் கூடுதல் விவரங்களுக்கு https://www.airindiaexpress.in/en என்ற ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்தை அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.