மதுரை, சிங்கப்பூர் இடையேயான ‘ஏர் இந்தியா’ விமான சேவை குறித்து விரிவாகப் பார்ப்போம்!

Photo: Air India

மதுரை மற்றும் சிங்கப்பூர் இடையே தினசரி விமானங்களை இருமார்க்கத்திலும் இயக்கி வருகிறது ஏர் இந்தியா நிறுவனம் (Air India). இந்த வழித்தடத்தில் நாள்தோறும் மூன்றுக்கும் மேற்பட்ட விமான சேவைகளை அந்நிறுவனம் தொடர்ந்து வழங்கி வருகிறது. இந்த விமான சேவை நேரடி விமான சேவை கிடையாது. இதில், மதுரையில் இருந்து சென்னை வழியாக சிங்கப்பூருக்கும், மதுரையில் இருந்து சென்னை, டெல்லி, மும்பை வழியாக சிங்கப்பூருக்கும் விமானங்கள் இயக்கப்பட்டு வருகின்றன.

சிங்கப்பூர் செயற்கைக்கோள்களுடன் விண்ணில் பாய்ந்தது பிஎஸ்எல்வி- சி53 ராக்கெட்!

இந்த வழித்தட விமான சேவைக்கான ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களுக்கான விமான பயண டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பயண அட்டவணை மற்றும் விமான பயண டிக்கெட் முன்பதிவு உள்ளிட்டக் கூடுதல் விவரங்களுக்கு https://www.airindia.in// என்ற ஏர் இந்தியா நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்தை அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.