‘மதுரை, சிங்கப்பூர் இடையேயான இண்டிகோ ஏர்லைன்ஸ் விமான சேவை குறித்து விரிவாகப் பார்ப்போம்’!

Photo: IndiGO Official Twitter Page

மதுரை மற்றும் சிங்கப்பூர் இடையே இரு மார்க்கத்திலும் தொடர்ந்து தினசரி விமான சேவைகளை வழங்கி வருகிறது இண்டிகோ ஏர்லைன்ஸ் விமான நிறுவனம் (Indigo Airlines). இந்த வழித்தடத்தில் தினசரி ஏழு விமான சேவைகளை விமான நிறுவனம் வழங்கி வருகிறது.

உங்களைத்தேடி வந்துவிட்டோம்! – சிங்கப்பூரிலுள்ள சிக்கன் பிரியர்களுக்கு சிறப்புச் செய்தி !

எனினும், இவை நேரடி விமான சேவை கிடையாது. மதுரையில் இருந்து சென்னை வழியாக சிங்கப்பூருக்கு ஐந்து விமான சேவைகளையும், மதுரையில் இருந்து பெங்களூரு வழியாக சிங்கப்பூருக்கு இரண்டு விமான சேவைகளையும் விமான நிறுவனம் வழங்கி வருகிறது.

அதிக குழந்தைகள் வேண்டும் என ஆசை… ஆனால் செலவு, மன அழுத்தம் அதிகம் என பின்வாங்கும் சிங்கப்பூரர்கள் – ஆய்வு

இந்த வழித்தடத்தில் மாதத்தில் அனைத்து நாட்களிலும் விமான சேவையை இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனம் வழங்கி வருகிறது. விமான பயண அட்டவணை, விமான பயண டிக்கெட் முன்பதிவு உள்ளிட்டக் கூடுதல் விவரங்களுக்கு https://www.goindigo.in/ என்ற இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்தை அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.