‘மதுரை, சிங்கப்பூர் இடையேயான இண்டிகோ ஏர்லைன்ஸ் விமான சேவை குறித்து விரிவாகப் பார்ப்போம்!’

Photo: IndiGO Official Twitter Page

மதுரை மற்றும் சிங்கப்பூர் இடையே இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனம் (Indigo Airlines) தொடர்ந்து இரு மார்க்கத்திலும் தினசரி விமான சேவைகளை வழங்கி வருகிறது. எனினும், இந்த வழித்தடத்தில் நேரடி விமான சேவையை விமான நிறுவனம் வழங்கவில்லை.

இலவசமாக இறால் வடை! -ஆனால் ஒருத்தருக்கு ஒரு வடைதான்! பூன் லேயில் கடைத் திறப்பு விழா

மதுரையில் இருந்து சென்னை மற்றும் பெங்களூரு ஆகிய நகரங்கள் வழியாக சிங்கப்பூருக்கு விமான சேவையை வழங்கி வரும் இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனம், தினசரி குறைந்தது 8 விமான சேவைகளை வழங்கி வருகிறது.

இந்த வழித்தட விமான சேவைக்கான விமான பயண டிக்கெட் முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விமான பயண அட்டவணை, விமான பயண டிக்கெட் முன்பதிவு உள்ளிட்டக் கூடுதல் விவரங்களுக்கு https://www.goindigo.in/ என்ற இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்தை அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சூரியனின் ஆற்றல் ஒரு மணிநேரத்திற்கு முன்பே தெரிந்துவிடும் ! – மற்ற நாடுகளுக்கும் விற்பனைசெய்ய திட்டமிடும் சிங்கப்பூர்

கிறிஸ்துமஸ், புத்தாண்டு உள்ளிட்டப் பண்டிகைகள் அடுத்தடுத்து வரவுள்ள நிலையில், இந்த வழித்தட இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தில் பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.