சிங்கப்பூர் செய்திகள்

மதுரையை சேர்ந்த 2 தொழிலாளிகள் சிங்கப்பூரில் உயிரிழப்பு!

Madurai Men's Suicide

மேலூர் கம்பர்மலைப்பட்டி பகுதியை சேர்ந்த சிவக்குமார் (36) மற்றும் பழையூர்பட்டி பகுதியை சேந்த தனுஷ்கோடி (26). இருவரும் சிங்கப்பூரில் வேலை செய்து வந்தனர்.

கடந்த ஜூன் 19 ஆம் தேதி அன்று சிவக்குமார் பாலத்திற்கு அடியிலும் மற்றும் தனுஷ்கோடி அவருடைய அறையிலும் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டனர். இந்த தற்கொலைக்கான காரணம் இதுவரை தெரியவில்லை.

சிவக்குமாருக்கு ஓராண்டுக்கு முன்பு தான் திருமணம் நடந்தது. தனுஷ்கோடிக்கு அடுத்த மாதம் திருமணம் நடக்கவிருந்தது குறிப்பிடத்தக்கது.

ஜூன் 21 மாலை இருவரது உடலும் விமானம் மூலம் சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டு முறைப்படி தகனம் செய்யப்பட்டது. இந்த தற்கொலை குறித்து மத்திய அரசு விசாரணை நடத்த வேண்டும். மேலும், இறந்தவர்களுக்காக நிவாரணம் வழங்க வேண்டும், என குடும்பத்தினர் வலியுறுத்தி உள்ளனர்.

Source : தமிழக ஊடகம்.

Related posts