“தமிழக தென்மாவட்டங்களுக்கும் விமானம் வேண்டும்”…மதுரை-சிங்கப்பூர் இடையே சேவை தொடங்க வலுக்கும் கோரிக்கை

singapore madurai airport gold

“மதுரை-சிங்கப்பூர்-மதுரை” வழித்தடத்தில் விமான சேவையை தொடங்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

அந்த வழித்தடத்தில் வரும் நவ. 29ஆம் தேதி முதல் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் பயணத்தை மீண்டும் துவங்க வேண்டும் என்பது கோரிக்கை.

இந்த கோரிக்கையை தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கம், இந்திய அரசின் மத்திய சிவில் விமான போக்குவரத்து அமைச்சகத்திற்கு விடுத்துள்ளது.

VTL பயணம்: நடைமுறை நுழைவுத் தேவைகளைச் சரிபார்க்க அறிவுறுத்தல்

வரும் நவ. 29 முதல் VTL பயண திட்டத்தின்கீழ், சிங்கப்பூர்-இந்தியா இடையே விமான சேவை மீண்டும் துவங்க உள்ளதை சங்கத் தலைவர் ஜெகதீசன் கூறினார்.

பொதுமக்கள், வர்த்தகம், ஊழியர்கள் என தென் மாவட்ட மக்கள் பயன்பெற மதுரை-சிங்கப்பூர்-மதுரை என்ற வழித்தடத்தில் விமான சேவை மீண்டும் துவங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

நேரடி விமான சேவை குறைந்த செலவுக்கு வழிவகுக்கும் என்றும், மேலும் பயண நேரம் குறைவாக அமைய பெரிதும் வழி வகுக்கும் என்றார்.

சிங்கப்பூர் to இந்தியா விமானங்களுக்கு அதிகரிக்கும் தேவை – டிராவல் ஏஜென்சிகளில் அலைமோதும் கூட்டம்