“மதுரை – சிங்கப்பூர்” விமான சேவையில் பாதிப்பு: சிக்கலில் இருக்கும் விமான நிலையம் – சிங்கப்பூர் பயணிகள் கவலை

சிங்கப்பூரில் இருந்து திருச்சிக்கு வந்த மதுரை பயணி - கைதான கதை

மதுரை விமான நிலையத்தின் பாதுகாப்பு பணிக்கு போதிய மத்திய தொழில் பாதுகாப்புப் படை (CISF) வீரர்கள் இல்லாததால் சிங்கப்பூருக்கு இயக்கப்படும் விமானம் இயக்குவதில் சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளது.

விமான நிலையத்தில் காலை 6 முதல் இரவு 10 மணி வரை, 2 சிப்டுக்கு மட்டுமே பாதுகாப்பு பணிக்கு CISF வீரர்கள் இருப்பதால் இரவு நேரத்தில் இயங்கும் விமானங்களை இயக்க முடியாமல் மூடப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

எல்லைக் கட்டுப்பாடுகள் தளர்வு: சொந்த நாடு திரும்பிய “சிங்கப்பூரில் பணிபுரியும் ஆயிரக்கணக்கான மலேசிய ஊழியர்கள்”

கிட்டத்தட்ட 2 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த மார்ச் 29 முதல் சிங்கப்பூருக்கு மீண்டும் மதுரை விமான நிலையத்தில் இருந்து விமானம் இயக்கப்பட்டது.

செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளில், மதுரையில் இருந்து சிங்கப்பூருக்கு தினமும் இரவு 9.35 மணிக்கு விமானம் புறப்பட்டு செல்கிறது.

இந்நிலையில், கடந்த மார்ச் 29 அன்று மேற்குறிப்பிட்ட நேரத்திற்கு சிங்கப்பூர் புறப்பட விமானம் தயாராக இருந்தது. ஆனால், அச்சமயம் தங்கள் பணி நேரம் முடிவடைந்தது என்று கூறி CISF வீரர்கள் புறப்பட்டனர்.

ஒரு சிப்டுக்கு 70 வீரர்கள் என 3 சிப்டுக்கு தேவையுள்ளது, ஆனால் அங்கு 145 வீரர்கள் இரண்டு சிப்ட்டுக்கு மட்டுமே உள்ளனர். மேலும், இரவு 10 மணியோடு வீரர்களின் பாதுகாப்பு பணி முடிந்து விடும். இவர்கள் இல்லை என்றால் விமான நிலையமே இல்லை.

இதற்கு தீர்வு காண வேண்டும் என்று தென் தமிழக வர்த்தகர்கள், தொழில் முனைவோர் வலியுறுத்தியுள்ளனர். சிங்கப்பூர் ஒரு முக்கிய வர்த்தக பகுதியாக தென் தமிழக வர்த்தகர்களுக்கு உள்ளது குறிப்பிடத்தக்கது.

வெளிநாட்டு ஊழியர்களின் எண்ணிக்கை… ஆண்டின் நடுப்பகுதியில் முந்தைய நிலைகளை எட்டும்!