வேலையை விட்டு நிற்பதாக கூறிய வெளிநாட்டு பணிப்பெண்ணை தாக்கியவருக்கு அபராதம்

PHOTO: Today

தன்னுடைய குழந்தைக்கு பணிப்பெண்ணிடம் இருந்து நோய் பரவாமல் தடுக்க, முதலாளி பணிப்பெண்ணை வேறு வீட்டில் தங்க வைத்துள்ளார்.

இதனை தொடர்ந்து, அந்த பணிப்பெண்ணை முதலாளி மீண்டும் தனது வீட்டிற்கு அழைக்க, அவர் முதலாளியின் மனைவி பாய் யிஹோங்-ஆல் துன்புறுத்தப்பட்டதாக கூறப்படும் பல நிகழ்வுகளை எண்ணத்தில் கொண்டு, வீட்டிற்கு திரும்பி வர பணிப்பெண் மறுத்துவிட்டார்.

பல்வேறு குற்றங்களில் ஈடுபட்ட இந்திய ஊழியருக்கு சிறை தண்டனை

இந்நிலையில், பணிப்பெண்ணை வீட்டை விட்டு வெளியே அழைத்து வர கை கலப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவத்தில், பாயின் தாயார் ஹாய் யுலன், பணிப்பெண்ணின் கையைப் பிடித்து இழுத்து, வீட்டை விட்டு வெளியே இழுப்பதற்காக அவரது தோள்களைப் பற்றிக் கொண்டு சண்டையிட்டார் என்று கூறப்படுகிறது.

மியான்மரை சேர்ந்த 31 வயது பணிப்பெண்ணுக்கு இந்த சம்பவத்தால் காயம் ஏற்பட்டது.

சீனாவைச் சேர்ந்த 57 வயதான ஹாய், கடந்த ஆண்டு பணிப்பெண்ணை தாக்கிய குற்றத்தை ஒப்புக்கொண்ட பின்னர் வெள்ளிக்கிழமை (டிசம்பர் 10) S$3,000 அபராதம் விதிக்கப்பட்டது.

சம்பவம் நடந்த அந்த நேரத்தில் ஹாய், சிங்கப்பூரில் குறுகிய கால விசிட் பாஸில் இருந்தார்.

34 வயதுடைய சீன நாட்டவரான பாய், பணிப்பெண்ணை தாக்கியதாக பல குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளது. அவர் வழக்கு இன்னும் நிலுவையில் உள்ளது.

சிங்கப்பூர் மீதான கட்டுப்பாடுகளை நீக்கிய இந்தியா: மீண்டும் தொடங்கும் தனிமை இல்லா விமான சேவை!