“ஒருவேளை மட்டுமே உணவு.. காலை 5 மணிக்கு முகத்தில் தண்ணீர் அடிக்கப்படும்..!” – சிங்கப்பூரில் வீட்டு வேலை செய்யும் இளம் பெண்ணின் கதறல்!

சிங்கப்பூரில் வெளிநாட்டு பணிப்பெண் ஒருவர், தனது முதலாளி தன்னை எப்படி தவறாக நடத்தினார் என்று கூறி அழும் வீடியோ, சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது.

கடந்த 2019 ஆம் ஆண்டு அக்டோபர் 4 ஆம் தேதி பதிவேற்றம் செய்யப்பட்ட வீடியோவில், வீட்டு வசதி மேம்பாட்டு வாரியத்தின் (HDB) பிளாக்கின், லிப்ட் அருகே ஒரு பணிப்பெண் மற்றொரு பெண்ணிடம் கொடுமையைக் கூறி அழுவதைக் காண முடிந்தது.

காஸ்டினா என்ற அந்த பெண், தான் இந்தோனேசியாவில் ஜாவாவில் உள்ள இந்திரமாயு என்ற நகரத்தைச் சேர்ந்தவர் என்றும், “மனச்சோர்வை” ஏற்படுத்தியதால் இனி சிங்கப்பூரில் வேலை செய்ய விரும்பவில்லை என்றும் கூறினார்.

தனக்கு ஒரு நாளைக்கு ஒரு வேளை மட்டுமே உணவு தரப்படுவதாகவும், தினமும் அதிகாலை 5 மணிக்கு தான் எழுந்திருப்பதாகவும், எழுந்திருக்காவிட்டால் முகத்தில் தண்ணீர் தெறிக்க நேரிடும் என்றும் குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும் இந்தோனேசியாவில் இருக்கும் தனது குடும்பத்தை அழைத்து வர முதலாளிகள் அனுமதிக்கவில்லை என்றும், தான் பசியுடன் இருந்தாலும், அதிக உணவு கேட்டால் திட்டுவார்கள் என்றும் காஸ்டினா தன்னை படம் பிடிக்கும் பெண்ணிடம் கூறினார்.

அந்த வீடியோ எடுக்கும் போது, காஸ்டினா ரொம்ப பயந்தாள். ஏனென்றால் வீடியோ விவகாரம் தெரிந்தால், அவளது முதலாளி தன்னை விட்டு வெளியேற முடியாமல் பூட்டி வைப்பார்கள் என்று குற்றம் சாட்டினாள். பிறகு  காஸ்டினாவை படமெடுக்கும் பெண் பொறுமையாக இருக்கும்படி கேட்டார்.

இந்த வீடியோ வைரலானத்தை தொடர்ந்து 2019 ஆம் ஆண்டு அக்டோபர் 6, மனிதவள அமைச்சகம் (MOM) காஸ்டினாவின் நிலைமை குறித்த அறிவிப்பை வெளியிட்டது.

ஒரு நாளைக்கு ஒரு வேளை உணவு மட்டுமே கொடுத்ததாக ஒரு பெண் பேசிய சமூக ஊடக பதிவை  நாங்கள் அறிவோம். இது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம். FDW தற்போது தூதரகத்தில் வைக்கப்பட்டுள்ளது.

தங்கள் FDW களுக்கு ஒரு நாளைக்கு மூன்று வேளை உணவை வழங்குவதற்கு அவர்கள் பொறுப்பு என்பதை முதலாளிகள் நினைவூட்டுவதாகவும் MOM தரப்பில் கூறப்பட்டுள்ளது. சிங்கப்பூரில் பணியிட சிக்கல்களை எதிர்கொள்ளும் எந்தவொரு பணியாலர்களும் 1800 339 5505 என்ற எண்ணில் MOM FDW ஹெல்ப்லைனை அழைத்து புகார் தெரிவிக்கலாம். இது அந்த பெண்ணுக்கு மட்டும் அல்ல. எல்லோருக்குமே பயன்படும்.

MOM பதிவு: https://www.facebook.com/sgministryofmanpower/posts/2465996923449560