முதலாளியை கத்தியால் தாக்கியதாக வீட்டுப் பணிப்பெண் சாங்கி விமான நிலையத்தில் கைது..!

Maid arrested at Changi airport: கத்தியால் கடுமையான காயத்தை ஏற்படுத்தியதற்காக 34 வயதான பணிப்பெண் நேற்று வெள்ளிக்கிழமை (ஜன. 17) கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது சனிக்கிழமை இன்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

காமன்வெல்த் க்ளோஸில் உள்ள தனது வீட்டில், அந்த பணிப்பெண் கத்தியைப் பயன்படுத்தி தாக்கியதாகக் பாதிக்கப்பட்ட பெண் கூறியுள்ளார், மேலும் வெள்ளிக்கிழமை காலை 11.10 மணியளவில் இது குறித்து எச்சரிக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க : சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (SIA) விமானத்தை விமர்சனம் செய்து காணொளி; கடும் எதிர்ப்பு மற்றும் கொலை மிரட்டல்..!

இந்நிலையில், இந்த சம்பவம் குறித்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், சிசிடிவி காட்சிகளை பார்வையிட்ட பின்னர், அந்த பணிப்பெண் சாங்கி விமான நிலைய முனையம் 1-ல் நேற்று (வெள்ளிக்கிழமை) கைது செய்யப்பட்டார்.

மேலும், ஆபத்தான ஆயுதத்தால் தானாக முன்வந்து கடுமையான காயத்தை ஏற்படுத்தும் குற்றச் செயலுக்கு ஆயுள் தண்டனையோ, 15 ஆண்டு வரை சிறைத்தண்டனையோ, அபராதமோ அல்லது பிரம்படியோ விதிக்கப்படலாம். பெண்களுக்கு பிரம்படி விதிக்கப்படாது.

Source : Straits Times