விபத்தில் தன் முதலாளியின் குழந்தையை காப்பாற்றி, தன்னுயிரை நீர்த்த பணிப்பெண்..!

Domestic helper, 30, killed after pushing toddler away before being hit by car at Lentor Ave

விபத்தில் தன் முதலாளியின் குழந்தையை காப்பாற்றி, தன்னுயிரை நீர்த்த இந்தியாவைச் சேர்ந்த பணிப்பெண்.

இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த 30 வயதான ஜஸ்பிரீட் கோர் (Jaspreet Kaur) என்ற பெண், புல்லியன் பார்க் (Bullion Park) என்ற கூட்டுரிமை வீட்டில் 3 மாதங்களாக பணிப்பெண்ணாக வேலை பார்த்து வந்தார்.

கடந்த செவ்வாய்க்கிழமை (நவம்பர் 5) அன்று, லெண்ட்டோர் அவென்யூவில் சாலையில் கோர் தனது முதலாளியின் இரண்டு வயது மகனை தள்ளுவண்டியில் அழைத்துக் கொண்டு சாலையைக் கடந்தார்.

அச்சமயம் அவர்களை நோக்கி கார் ஒன்று வருவதை கண்ட கோர், தம் முதலாளியின் குழந்தையை ஆபத்திலிருந்து காப்பாற்றினார். ஆனால், கார் மோதியதில் துரதிஸ்டவரமாக கோர் உயிரிழந்தார். அந்த குழந்தை சிறு காயங்களோடு உயிர் பிழைத்தது.

இந்த விபத்தை ஏற்படுத்திய 44 வயதான டிரைவர் கவனக்குறைவாக வாகனம் ஓட்டியதாக கைது செய்யப்பட்டார்.

இந்நிலையில் கோரின் முதலாளி கூறுகையில், விபத்து நடந்த நாளிலிருந்து தாம் தூங்கவில்லை, வீட்டில் எங்கு சென்றாலும் கோரின் ஞாபகம் தான் வருகிறது.
கோர் எங்கு சென்றார், என்று என் மகன் கேட்டுக்கொண்டேயிருக்கிறான். ‘நான் என்ன பதில் சொல்வது’, என்று வேதனையுடன் கூறியுள்ளார்.

கோருக்கு 7 வயது மகள் உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், கோரின் முதலாளியின் அண்டை வீட்டுக்காரர்கள் அவரின் குடும்பத்திற்கு ஆதரவளிக்கும் வகையில் நன்கொடை வழங்கியுள்ளனர்.

கோரின் இந்த தியாக செயலுக்கும் நன்றி கூற வார்த்தைகள் போதாது என்று, கோரின் முதலாளி மனமுடைந்து கூறியுள்ளார்.