இப்படி பண்ணா வெளிநாட்டு ஊழியர்கள் மேல எப்படி நம்பிக்கை, கருணை வரும்…!

Maid hits elderly man police investigating
Stomp

குயின்ஸ்டவுனில் சக்கர நாற்காலியில் அமர்ந்திருந்த முதியவரை வெளிநாட்டு வீட்டுப் பணிப்பெண் தாக்கியது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த சம்பவம் கடந்த பிப்ரவரி 28 அன்று மதியம் 2.30 மணியளவில் பிளாக் 53 Strathmore Avenueவில் நடந்தது என ஷின் மின் டெய்லி நியூஸ் கூறியுள்ளது.

JUSTIN: இந்திய பயணிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி! – இந்தியாவின் அனைத்து நகரங்களில் இருந்தும் சிங்கப்பூருக்கு தனிமை இல்லா சேவை!

33 வயதான யாங் என்ற ஒரு இல்லத்தரசி இந்த சம்பவத்தை நேரில் கடந்தாக கூறியுள்ளார்.

அதாவது, வீட்டுப் பணிப்பெண் தனது கைகளால் சக்கர நாற்காலியில் இருந்த ஆடவரை தலையில் அடிப்பதைக் கண்டதாக யாங் கூறினார்.

இதனை வீடியோ ஆதாரமாக தாம் எடுத்ததாகவும், பின்னர் இரக்கமற்ற பணிப்பெண்ணைக் கண்டித்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

நேரில் சென்று இதுபற்றி கேட்டபோது தாங்கள் விளையாடியதாக பணிப்பெண் மழுப்பியுள்ளார்.

பின்னர் யாங் மற்றும் அவரின் கணவர் போலீசை அழைப்பதாக கூறியவுடன், அவர்களிடம் “என்னை விட்டுவிட்டுங்கள்” என பணிப்பெண் கெஞ்சியதாகவும் கூறினார் யாங்.

பின்னர் மதியம் 2.45 மணியளவில் உதவி வேண்டி அழைப்பு வந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

ஒரு சிலர் செய்யும் தவறால் வெளிநாட்டில் இருந்து வரும் அனைத்து தரப்பு ஊழியர்கள் மீதும் கலங்கம் ஏற்படுகிறது.

சிங்கப்பூர் பயணிகளுக்கு இனி அனைத்தையும் இலகுவாக்கும் “MyICA” ஆப்: Visit pass-களையும் நீட்டிக்கலாம்!