வெளிநாட்டவருக்கு 13 மாதங்களாக சம்பளம் கொடுக்காத முதலாளி… S$14,000 அபராதம் விதித்த நீதிமன்றம்

indian-origin-singapore-jailed

சிங்கப்பூரில் வெளிநாட்டவருக்கு 13 மாதங்களாக சம்பளம் கொடுக்கத் தவறிய முதலாளிக்கு S$14,000 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூர் முதலாளி ஒருவரை, பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த பணிப்பெண் ஒருவரை வேலைக்கு அமர்த்தியுள்ளார்.

சிங்கப்பூரில் வெளிநாட்டு கட்டுமான ஊழியருக்கு சிறைத்தண்டனை, அபராதம்

ஆனால், அந்த பணிப்பெண்ணுக்கு 13 மாதங்களுக்கு சம்பளம் மொத்தம் S$6,500 அவர் கொடுக்கவில்லை.

56 வயதான சான்டா மரியா மைக்கேல் தெரசா என்ற முதலாளி, வெளிநாட்டு பணிப்பெண்ணுக்கு சம்பளம் செலுத்தத் தவறியதற்காக நான்கு குற்றச்சாட்டுகளை இன்று வியாழன் (ஜனவரி 6) ஒப்புக்கொண்டார்.

இதே போன்ற குற்றங்களுக்காக, கூடுதலாக ஒன்பது குற்றச்சாட்டுகள் கவனத்தில் கொள்ளப்பட்டன.

அபராதத்தை செலுத்த முடியாவிட்டால், தெரசா 40 நாட்கள் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும்.

சிங்கப்பூரில் S$1,500 வரை ஊதியம் பெறும் சில “Work permit” பணியாட்கள் – அவர்களுக்கு மட்டும் என்ன சலுகை?