முதலாளியிடம் திருடிய பணம், பொருட்களோடு சொந்த நாடு செல்ல இருந்த பணிப்பெண் – கையும்களவுமாக பிடித்த முதலாளி

Maid theft employer find

சொந்த நாட்டிற்குத் செல்ல இருந்த பணிப்பெண்ணின் உடமைகளை முதலாளி சோதனை செய்தார், அப்போது அவரிடம் இருந்து திருட்டு ரொக்கம், பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

சுமார் ஒன்றரை வருடங்கள் தனது முதலாளியிடம் பணிபுரிந்த பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த அந்த பணிப்பெண், வெளிநாட்டு ரொக்கம், பணம் மற்றும் நகைகள் என மொத்தம் S$14,733.35 மதிப்பிலான பொருட்களை திருடியுள்ளார்.

சிங்கப்பூரில் இருந்து திரும்பியவர் குறித்து பொய்யான தகவல் அளித்த நபர்கள் – எச்சரித்த போலீசார்

காஸ்ட்ரோ மெல்டி அலோகுவினா என்ற 32 வயதான பணிப்பெண், திருட்டு குற்றத்தை ஒப்புக்கொண்ட பின்னர் அவருக்கு ஐந்து மாத சிறைத்தண்டனை இன்று புதன்கிழமை (டிசம்பர் 29) விதிக்கப்பட்டது.

காஸ்ட்ரோ தனது 46 வயதான முதலாளியிடம் 2020ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல், மாதம் S$662 சம்பளத்துக்கு பணிபுரிந்ததாக கூறப்பட்டுள்ளது.

2021ஆம் ஆண்டு நவம்பர் மாதத்துக்கு முன், காஸ்ட்ரோ தனது முதலாளியிடம் வேலை செய்வதை நிறுத்த முடிவு செய்து, பின்னர் நவம்பர் 28 அன்று வீடு திரும்ப திட்டமிட்டு இருந்தார்.

இதனை அடுத்து, நவம்பர் 20ஆம் தேதி இரவு 11 மணியளவில், முதலாளி அவரது உடைமைகளைச் சோதனை செய்தார்.

அப்போது, அவரிடம் கட்டுக்கட்டாக வெளிநாட்டு ரொக்கம், வீட்டு உபயோகப் பொருட்கள், நகைகள் ஆகிவற்றை கண்டுபிடித்தார், இதனை அடுத்து மறுநாள் முதலாளி போலீஸை அழைத்தார்.

விசாரணையில், காஸ்ட்ரோ இந்த ஆண்டு ஜனவரி முதல் தனது முதலாளியிடம் இருந்து திருடத் தொடங்கினார் என்று கூறப்பட்டுள்ளது.

வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதி உணவுத் தோட்டங்கள்: “ஊழியர்களுக்கு நல்ல உணவு, மன ஆரோக்கியத்தை வழங்கும்”