“மலக்குல் மௌத்” Tiktok கொடூர சவாலில் ஈடுபட்டு உயிரை விட்ட இந்தோனேசிய ஆடவர்

indonesia-truck-challenge-teenager-killed

இந்தோனேசியரான 18 வயதுமிக்க ஆடவர் ஒருவர் Tiktok சவால் வீடியோ மேற்கொண்டபோது உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தோனேசியா, Banten பகுதியில் மூன்று ஆடவர்கள் அடங்கிய அந்த குழு, “மலக்குல் மௌத்” சவாலை செய்ய முயற்சிக்கும்போது இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது.

Great World ஷாப்பிங் மாலில் கடும் சண்டை… வீடியோ அதிகம் வைரலானதை அடுத்து இருவரை தூக்கியது போலீஸ்!

“மலக்குல் மௌத்” என்றால் “உயிரை பறிக்கும் வானவர் சவால்” என்று மொழிபெயர்ப்பு செய்யப்பட்டுள்ளது.

இந்த கொடூர சவாலுக்கு முயற்சிப்பவர்கள் முதலில் ஓடும் லாரியின் முன்னாள் செல்ல வேண்டும் மற்றும் லாரி அந்த நபரைத் தாக்காமல் நிற்க வேண்டும், அப்போது அவர் வெற்றி பெற்றதாக ஏற்றுக்கொள்ளப்படும்.

இந்த கொடூர சவாலின் வீடியோக்கள் பொதுவாக TikTok செயலிகளில் அதிகம் காணப்படுகின்றன.

கடந்த ஜூன் 3 அன்று, மூன்று ஆடவர்கள் கொண்ட குழு இந்த சவாலுக்கு முயற்சித்தது, அப்போது ​​அவர்களில் ஒருவரான 18 வயதுடையவர் லாரி முன் பாய்ந்தார். ஆனால், லாரி நிற்க தவறியபோது அதிலிருந்து அவர் வெளியேறத் தவறிவிட்டார்.

நிற்காமல் சென்ற லாரி தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே இறந்ததாக கோகனட்ஸ் ஜகார்த்தா தெரிவித்துள்ளது.

லாரி ஓட்டுநர் விசாரணைக்காக தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

இதுபோன்ற முட்டாள் தனமான சவால்களில் ஒருபோதும் ஈடுபட வேண்டாம்.

சிங்கப்பூரில் “வெளிநாட்டு ஊழியர்கள் சம்பாதிக்கும் S$18 க்கு அது சாத்தியமில்லை”… உதவ முன்வருமாறு அழைப்பு