மலேசிய பிரதமர் இன்று சிங்கப்பூருக்கு வருகிறார்!

Photo: Malasiya Prime Minister Official Twitter Page

கொரோனா தடுப்பூசியை முழுமையாகச் செலுத்திக் கொண்டவர்களுக்கான சிறப்பு பயணத் திட்டத்தின் (Land Vaccinated Travel Lane-‘VTL’) கீழ் சிங்கப்பூர் மற்றும் மலேசியா இடையேயான விமான போக்குவரத்து மற்றும் தரைவழிப் போக்குவரத்து இன்று (29/11/2021) தொடங்கும் என்று சிங்கப்பூர் சிவில் விமான போக்குவரத்து ஆணையம் அறிவித்திருந்தது.

பல மாதங்களுக்கு பிறகு பயணிகள் போக்குவரத்து இரு நாடுகளுக்கும் இடையே மீண்டும் தொடங்குகிறது. இதற்காக சிங்கப்பூர் மற்றும் மலேசியாவை இணைக்கும் எல்லை பகுதியான ஜொகூரில் இன்று (29/11/2021) நிகழ்ச்சி ஒன்றிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில், சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் மற்றும் மலேசிய பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப் (Malaysia Prime Minister Ismail Sabri Yaakob) உள்ளிட்ட இருநாட்டு அமைச்சர்கள், அரசு உயரதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொள்ள உள்ளனர்.

பயணிகளும் வருகையின்போது ART விரைவு சோதனை கட்டாயம்

இந்நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு தனது அதிகாரப்பூர்வ முதல் அரசுமுறை பயணமாக சிங்கப்பூருக்கு வருகிறார் மலேசிய பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப். பின்னர், இஸ்தானாவில் நடைபெற உள்ள வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும், மலேசிய பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோப், சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங், சிங்கப்பூர் அதிபர் ஹலிமா யாக்கோப் ஆகியோரைச் சந்தித்துப் பேசுகிறார்.

இச்சந்திப்பின் போது, இரு தரப்பு உறவை மேலும் வலுப்படுத்துவது, பொருளாதாரம், கொரோனா பரவல், கொரோனா தடுப்பூசிப் போடும் பணிகள், சரக்கு இறக்குமதி, ஏற்றுமதி உள்ளிட்டவைக் குறித்து மலேசிய பிரதமர் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தகவல் கூறுகின்றன.

“கூடுதலாக முன்னேறுவதற்கு முன் மீண்டும் சில படிகள் பின்வாங்க வேண்டிய கட்டாயம் ஏற்படலாம்” – பிரதமர் லீ

இதனிடையே, மலேசிய பிரதமருக்கு மதிய உணவு விருந்தையளிக்கிறார் சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங்.

மலேசிய பிரதமரின் சிங்கப்பூர் பயணத்தின் போது, அந்நாட்டின் சர்வதேச வர்த்தகம் மற்றும் தொழில்துறையின் மூத்த அமைச்சர் முகமது அஸ்மின் அலி (Senior Minister of International Trade and Industry Mohamed Azmin Ali), வெளியுறவுத்துறை அமைச்சர் சைபுதீன் அப்துல்லா (Minister of Foreign Affairs Saifuddin Abdullah), போக்குவரத்துத்துறை அமைச்சர் வீ கா சியோங், ஜொகூர் முதலமைச்சர் ஹாஸ்னி முகமது (Johor Chief Minister Hasni Mohammad) மற்றும் மூத்த அதிகாரிகள் உள்ளிட்டோர் உடனிருப்பர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் மேலும் 1,761 பேருக்கு கொரோனா உறுதி!

சுமார் மூன்று ஆண்டுகளுக்கு பிறகு மலேசிய பிரதமர் முதல் அரசுமுறை மற்றும் அதிகாரப்பூர்வ பயணமாக சிங்கப்பூருக்கு வருகிறார் என்பது நினைவுக்கூறத்தக்கது.

‘VTL’ திட்டத்தின் கீழ் மலேசியாவில் இருந்து சிங்கப்பூருக்கும், சிங்கப்பூரில் இருந்து மலேசியாவுக்கு ஆறு விமான நிறுவனங்கள் இன்று (28/11/2021) முதல் விமான சேவையைத் தொடங்க உள்ளனர். அதேபோல், ‘VTL’ தரைவழி பயணத் திட்டம் இன்று முதல் தொடங்க உள்ள நிலையில், ‘VTL’ தரைவழி பயணம் மேற்கொள்ளும் பயணிகள், ‘VTL’ பேருந்துகளில் மட்டுமே பயணம் மேற்கொள்ள வேண்டும். மேலும், அவர்கள் சிங்கப்பூர் நாட்டின் குடியுரிமை (Singapore Citizens),நிரந்தர குடியுரிமை (Permanent Residents)மற்றும் நீண்ட கால அனுமதி அட்டை வைத்திருப்பவர்களாக (Long-Term Pass Holders) இருக்க வேண்டும். அதேபோல், தரைவழி பயண மேற்கொள்ளும் அனைவருக்கும் ‘ART’ கொரோனா பரிசோதனை கட்டாயமாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.