விபத்தில் சிக்கியவரை காப்பாற்ற விரைந்து வந்த ஆம்புலன்ஸ் ஓட்டுநர் – இறுதியில் விபத்தில் இறந்தது தன் மகன் என்று அறிந்து கதறிய சோகம்

malaysia-ambulance-driver-own-son-accident
Facebook & New Straits Times

மலேசியாவில் உள்ள டெரெங்கானுவில் கடந்த நவம்பர் 6, ஞாயிற்றுக்கிழமை மாலை சுமார் 4:30 மணியளவில் மோட்டார் பைக் விபத்து நடந்தது.

இதற்கு அவசர உதவி வழங்க வேண்டி 49 வயதான ஆம்புலன்ஸ் ஓட்டுநர் ஒருவர் சம்பவ இடத்திற்கு விரைவாக அனுப்பப்பட்டார்.

அதாவது, சுங்கை டோங் ஹெல்த் கிளினிக் ஆம்புலன்ஸ் ஓட்டுநராக முகம்மது தக்வா இஸ்மாயில் பாதிக்கப்பட்டவரின் உடலை எடுத்து செட்டியூ மருத்துவமனைக்கு கொண்டு செல்வதற்காக அழைக்கப்பட்டார்.

இந்நிலையில், அவர் சம்பவ இடத்திற்கு வந்துபார்த்தபோது தன் குடும்பத்தினருக்கு ஏதோ மோசமாக நடந்துள்ளதை அவர் உணர்ந்தார்.

சிங்கப்பூருக்கு வரும் S pass வைத்திருப்பவர்கள் ஊருடன் ஒன்றி வாழ புதிய திட்டம்

ஏனெனில், அவர் ​​​​விபத்துக்குள்ளான நபரின் மோட்டார் சைக்கிள் சாலையில் கிடப்பதை அவர் அடையாளம் பார்த்ததால் அவருக்கு ஏதோ ஒரு அச்ச உணவர்வு ஏற்பட்டது.

இறுதியாக அந்த பைக் அவரது மகன் முகமது அய்மான் (21) என்ற இளைஞருக்கு சொந்தமானது என்பது உறுதியானது. அய்மான் மீது லாரி மோதி பயங்கர விபத்து ஏற்பட்டதை சம்பவ இடத்தில் தந்தை அறிந்தார்.

தக்வாவின் மகன் வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தபோது விபத்து நடந்தது என்று கூறப்பட்டுள்ளது.

தலையில் காயம் ஏற்பட்டு அய்மான் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்று வட்டார காவல்துறை தலைமை துணை கண்காணிப்பாளர் தெரிவித்தார்.

“21 வருடங்களில் நான் ஆம்புலன்ஸ் ஓட்டுநராகப் பணிபுரிந்தேன், குடும்ப உறுப்பினர் சம்பந்தப்பட்ட சம்பவத்தை நான் முதன்முறையாக எதிர்கொண்டேன்” என்றார் தக்வா.

“அந்த நேரத்தில் நான் உணர்ந்த துக்கம் அல்லாஹ்வுக்கு மட்டுமே தெரியும்” என்று தக்வா நியூ ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸிடம் கூறினார்.

போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பணப் பையை தொலைத்த ஓட்டுநர்: $300 வரை ரொக்கம், ஓட்டுநர் உரிமம் இருந்ததாக தகவல் – கண்டறிய உதவுங்கள்