24 பயணிகளுடன் வந்த பேருந்து கவிழ்ந்து விபத்து… 19 பேர் மருத்துவமனையில் அனுமதி

Malaysia bus Singapore accident
Facebook/Bomba Kuala Lumpur

கோலாலம்பூரின் ஈப்போவிலிருந்து சிங்கப்பூர் நோக்கி வந்துகொண்டிருந்த இரட்டை அடுக்கு பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

நேற்று முன்தினம் வியாழக்கிழமை (ஜூலை 21) நள்ளிரவு 12.05 மணியளவில் நடந்த இந்த சம்பவத்தில் 19 பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

சிங்கப்பூரில் வெளிநாட்டு ஆடவரை காணவில்லை – கண்டுபிடிக்க உதவுங்க “மைக்செட்” வாசகர்களே!

சுமார் 24 பயணிகளுடன் சென்ற அந்த பேருந்து, காங்கிரீட் சாலை தடுப்பில் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்ததால் இந்த விபத்து ஏற்பட்டதாக கோலாலம்பூர் காவல்துறைத் தலைவர் அஸ்மி அபு காசிம் தெரிவித்தார்.

பேருந்தில் பயணித்த 19 பயணிகள் காயமடைந்ததாகவும், அவர்கள் கோலாலம்பூர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டதாகவும் திரு அஸ்மி கூறினார்.

இரண்டு பேருந்து ஓட்டுனர்கள் மற்றும் ஐந்து பயணிகளுக்கு காயம் ஏற்படவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

அந்த ஐந்து பேரில் சிங்கப்பூரை சேர்ந்த 6 வயது சிறுமியும் அடங்கும். மற்ற அனைவரும் மலேசியர்கள் என கூறப்பட்டுள்ளது.

இதில் மீட்புக் குழுவினர் பேருந்தின் கண்ணாடியை உடைத்து அதில் சிக்கியவர்களை மீட்டதாகவும் அவர் கூறினார்.

போதைப்பொருள் குற்றவாளிகள் என சந்தேகிக்கப்படும் 100 பேர் கைது