கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்ட தன் முதல் குடிமகனை உறுதிப்படுத்திய மலேசியா..!

Malaysia confirms first citizen case of novel coronavirus; man was in Singapore for meeting attended by delegates from China (Photo: Facebook/Noor Hisham Abdullah)

Malaysia confirms first citizen case of novel coronavirus : கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட நாட்டின் முதல் குடிமகனை மலேசியா இன்று செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 4) உறுதிப்படுத்தியுள்ளது.

அந்நாட்டில், இந்த வைரஸ் தோற்று கிருமியால் பாதிக்கப்பட்ட மொத்த நபர்களின் எண்ணிக்கையை 10 ஆக உயர்ந்துள்ளது.

இதையும் படிங்க : வூஹான் வைரஸ்: சீனா, சிங்கப்பூர், இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் அண்மை நிலவரம்…!

இதில் 41 வயதான மலேசியர் கடந்த மாதம் சீனாவைச் சேர்ந்த சக ஊழியர்களுடன் ஜனவரி 16 முதல் ஜனவரி 23 வரை சிங்கப்பூர் சென்றிருந்ததாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதில் சீன நாட்டவர்கள் உள்ளிட்ட சர்வதேச பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

அவர் மலேசியா திரும்பிய கிட்டத்தட்ட ஒரு வாரத்திற்குப் பிறகு, அதாவது கடந்த ஜனவரி 29 அன்று அந்த நபருக்கு வைரஸ் தொற்றுக்கான அறிகுறிகள் இருந்ததாக கூறப்படுகிறது.

மேலும், அந்த நபர் சீரான நிலையில் உள்ளதாகவும், சுங்கை புலோ (Sungai Buloh) மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் சுகாதார அமைச்சர் துல்கெஃப்ளை அஹ்மத் (Dzulkefly Ahmad) தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க : ஆசியாவின் மிகப்பெரிய “சிங்கப்பூர் ஏர்ஷோ 2020” – சில நிறுவனங்கள் விலகலா..?

கூடுதலாக, 20 சந்தேகத்திற்குரிய நபர்கள் தற்போது சோதனை முடிவுகளுக்காக காத்திருக்கின்றன.

இதற்கு முன்னர், மலேசியாவில் ஜனவரி 30 ஆம் தேதி வரை மொத்தம் 8 கொரோனா வைரஸ் வழக்குகள் பதிவாகியிருந்தன, இவர்கள் அனைவரும் சீன நாட்டை சேர்ந்தவர்கள் ஆவார்கள்.

Source : CNA