இது தெரியாம மலேசியா விமான நிலையத்திற்கு வராதீங்க! – மலேசியாவிற்குள் நுழையும் அல்லது வெளியேறும் ஒவ்வொரு பயணியும் தெரிந்து கொள்ள வேண்டியவை

malaysia customs airlines travellers
மலேசியாவிலிருந்து வெளியேறும் அல்லது நுழையும் பயணிகளுக்கு மலேசியாவின் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் (CAAM) அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது.
பயணிகள் தங்களது வருகை மற்றும் புறப்படும்போது சுங்கப்படிவங்களை பூர்த்தி செய்ய வேண்டும் என்று கடந்த செவ்வாய்க்கிழமை (அக்.4) அன்று வெளியிட்டது.
மலேசியாவிற்கு வரும் ஒவ்வொரு பயணியும் மூன்றாம் அட்டவணையில் உள்ள படிவம் சுங்க எண்.7 இல் அறிவிக்க வேண்டும் என்று ஆணையம் தெரிவித்துள்ளது.
சுங்கப்படிவத்தை அறிவிப்பது சட்டப்பூர்வத் தேவை என்று (RMCD) ராயல் மலேசியன் சுங்கத்துறை CAAM-க்கு வழங்கிய கடிதத்தில் குறிப்பிட்டிருந்தது.
இந்த கடிதத்தை செப்டம்பர் 5 அன்று வழங்கியது.ஏற்கனவே அமலில் இருந்த இந்த நடவடிக்கை பல ஆண்டுகளுக்கு முன்பு நிறுத்தப்பட்டது.தற்போது மீண்டும் நடவடிக்கையை தொடங்குவதற்கு எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை என்று மலேசியப் பத்திரிக்கைகள் கூறுகின்றன.

மலேசியாவிற்குள் நுழையும் அனைத்து விமான நிறுவனங்களும் இந்தத் தேவையை பயணிகளுக்கு தெரிவிக்க வேண்டும்.படிவத்தை பூர்த்தி செய்து விமான நிலையத்திற்கு வந்தவுடன் சுங்க அதிகாரியிடம் சமர்ப்பிப்பது பற்றி பயணிகளுக்கு வழிகாட்ட வேண்டும் என்று CAAM கூறியது.
மலாய் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் இந்த அறிவிப்பு வழங்கப்படும்.மேலும் இந்த நடவடிக்கையை அமலுக்கு கொண்டு வருவதற்கு முன்பு, பயணிகள் தடை செய்யப்பட்ட அல்லது வரிவிதிக்கக்கூடிய பொருட்களை அல்லது S$14,220-க்கு அதிகமான தொகையை கொண்டு செல்வதை சுங்க அதிகாரிகளிடம் வாய்மொழியாக தெரிவிக்க வேண்டும்.