தனது மனைவிக்கு விலையுயர்ந்த iPhone வாங்கி கொடுக்க விருப்பம் – நிறைவேற்றி காட்டிய ஊழியர்

Malaysia husband buy iPhone 13 Pro wife
Nick Hiew/Facebook

மலேசியாவில் சராசரி ஊழியர் ஒருவர் தனது மனைவியை மகிழ்விப்பதற்காக சிறப்பான ஒரு பரிசை கொடுக்க எண்ணினார்.

அவர் சுமார் ஒரு வருடம் சேமித்த பணத்தை கொண்டு, திருமண ஆண்டுவிழா பரிசாக iPhone 13 Proவை தன் மனைவிக்கு வாங்கி கொடுத்துள்ளார்.

COVID-19 விதிகளை மீறி நடந்ததாக காட்டும் இறுதி ஊர்வல காணொளி: நெட்டிசன்கள் காட்டம்

கணவர் நிக் ஹியூ, இந்த மனதை கவரும் கதையை கடந்த நவம்பர் 14 அன்று பேஸ்புக்கில் பகிர்ந்துள்ளார்.

தன்னுடைய மனைவி ஜோவிற்கு, பெரிதாக ஏதாவது கொடுக்க வேண்டும் என்று எண்ணினார்.

அவரது இலட்சியம், மனைவிக்கு புத்தம் புதிய iPhone 13 Proஐ திருமண ஆண்டுவிழாவிற்கு பரிசாக வழங்க வேண்டும் என்பது.

மலேசியாவில், iPhone 13 Pro விலை RM4,899 (S$1,593) இலிருந்து தொடங்குகிறது, இது நிச்சயமாக அவருக்கு சிறிய தொகை அல்ல.

மலேசியாவில் உள்ள ஒரு டிஜிட்டல் செய்தித் தளமான Wau Post உடன் பேசிய நிக் ஹியூ, RM20 நோட்டுகள் மூலம் போதுமான பணத்தை எவ்வாறு சேமித்தார், இறுதியில் தனது கனவை எவ்வாறு நிறைவேற்றினார் என்பதை வெளிப்படுத்தினார்.

அந்த கைபேசியை வாங்க ஒரு தனி சேமிப்பை உருவாக்க வேண்டும் என்ற யோசனை அவருக்கு வந்தது, அவர் RM20 (சுமார் S$6.50) பண நோட்டுகளை மட்டும் ஒதுக்கி அதனை சேமிக்க தொடங்கினார்.

அவரின் பண மாற்றத்தின் போது எப்போதெல்லாம் RM20 நோட்டு வருகிறதோ அப்போதெல்லாம் அதை சேமித்து வைத்தார்.

ஹியூவின் அர்ப்பணிப்பும் விடாமுயற்சியும் இறுதியில் பலனளித்தன. இறுதியில், அவர் ஒரு வருட காலத்திற்குள் iPhone 13 Proவை வாங்கும் அளவுக்கு RM20 நோட்டுகளை சேமித்தார்.

Wau Post படி, அவர் இறுதியாக நவம்பர் 12 அன்று iPhone 13 Proஐ வாங்கினார்.

VTL பயணம்: விமான கட்டணத்தை விட COVID-19 சோதனைகளுக்கான செலவு அதிகம்