சிங்கப்பூரில் பார்க்கிங் கட்டணம் செலுத்தாமல் சென்றால் உங்களுக்கான அபராதம் என்ன தெரியுமா?

malaysia-parking-evasion

மலேசிய பதிவு பெற்ற மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற ஆடவர் ஒருவர் கட்டணம் செலுத்தாமல், சிங்கப்பூரில் உள்ள அடுக்குமாடி கார் நிறுத்துமிடத்திலிருந்து வெளியே சென்ற சம்பவம் அனைவரையும் முகம் சுளிக்க வைத்தது.

இந்த சம்பவம் அவர்களுக்கு முன்னாள் நின்றுகொண்டிருந்த காரின் பின்பக்க கேமராவில் பதிவாகியுள்ளது, அது பின்னர் பேஸ்புக்கிலும் பதிவிடப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் போதைப்பொருள் கடத்தி சிக்கிய வெளிநாட்டு ஆடவருக்கு மரண தண்டனை!

கடுமையான அபராதங்கள்

ஜூலை 1, 2019 முதல் பார்க்கிங் தொடர்பான குற்றங்களைத் தடுக்க கடுமையான அபராதங்கள் அறிமுகப்படுத்தப்பட்டது.

வாகன நிறுத்துமிடத்தில் கட்டணத்தை செலுத்தாமல் சென்ற வாகன ஓட்டிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் சுமார் 4,400 நோட்டிஸ்களை, HDB மற்றும் நகர்ப்புற சீரமைப்பு ஆணையம் வழங்கியுள்ளன.

மோட்டார் சைக்கிள்கள், கார்கள் மற்றும் கனரக வாகனங்கள் கட்டண ஏய்ப்பில் ஈடுபட்டால், அவைகளுக்கு முறையே S$25, S$50 மற்றும் S$80 அபராதம் விதிக்கப்படுகின்றன.

சாங்கி கடற்கரையில் ஒன்றுகூடிய மக்கள்… கடல்வாழ் உயிரினங்களை தோண்டி எடுத்து வீட்டுக்கு கொண்டு சென்ற அறியாமை