மலேசிய பிரதமருக்கு மதிய விருந்து வைத்து உபசரித்த பிரதமர் லீ சியன் லூங்!

Photo: Singapore Prime Minister Official Facebook Page

மலேசியா நாட்டின் 10- வது பிரதமராகப் பதவியேற்ற அன்வர் இப்ராஹிம், முதல் வெளிநாட்டு அரசுமுறைப் பயணமாக ஜனவரி 30- ஆம் தேதி அன்று சிங்கப்பூருக்கு வருகைத் தந்தார். சாங்கி சர்வதேச விமான நிலையத்தில் மலேசிய பிரதமரை சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன் வரவேற்றார்.

மலேசிய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு இரவு விருந்து வைத்து உபசரித்த அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன்!

அதைத் தொடர்ந்து, இஸ்தானாவுக்கு சென்ற மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிமுக்கு, சிங்கப்பூர் அரசு சார்பில் அரசு மரியாதை அளிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, மலேசிய பிரதமரை சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் மற்றும் அவரது மனைவி ஆகியோர் வரவேற்றனர். அதன் தொடர்ச்சியாக, இரு நாட்டு தலைவர்களும் மலேசியா மற்றும் சிங்கப்பூர் இடையேயான நல்லுறவை மேம்படுத்துவது, பொருளாதாரம், நிலுவையில் உள்ள பல்வேறு விவகாரங்கள் குறித்தும் ஆலோசித்தனர்.

Photo: Singapore Prime Minister Official Facebook page

பின்னர், சிங்கப்பூர் மற்றும் மலேசியா பிரதமர்கள் தலைமையிலான இரு நாட்டு அமைச்சர்கள் மட்டத்திலான உயர்மட்டப் பேச்சுவார்த்தையும் நடைபெற்றது. இதில் சிங்கப்பூர் அமைச்சர்கள் எஸ்.ஈஸ்வரன், டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன், மாலிகி ஒஸ்மான், லாரன்ஸ் வோங், இங் எங் ஹென் ஆகியோர் கலந்துக் கொண்டனர். அதேபோல், மலேசியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர், வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர், போக்குவரத்துத்துறை அமைச்சர் ஆகியோர் பேச்சுவார்த்தையில் கலந்துக் கொண்டனர்.

மசாஜ் பார்லரில் பெண்ணை மானபங்கம் செய்ததாக ஆடவர் கைது

அதன் தொடர்ச்சியாக, சிங்கப்பூர், மலேசியா பிரதமர்கள் முன்னிலையில் இரு நாடுகளுக்கும் இடையே டிஜிட்டல் பொருளாதாரம் (Digital Economy), பசுமை பொருளியல் (Green Economy), தனிப்பட்ட தகவல் பாதுகாப்பு (Personal Data Protection), இணையப் பாதுகாப்பு (Cyber Security) ஆகிய மூன்று ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.

Photo: Singapore Prime Minister Official Facebook Page

பின்னர், இஸ்தானாவில் மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம் மற்றும் அவரது மனைவி, மலேசிய அமைச்சர்களுக்கு சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் மற்றும் அவரது மனைவி மதிய விருந்து அளித்து உபசரித்தனர். இந்த நிகழ்ச்சியில், சிங்கப்பூர் அமைச்சர்களும், உயரதிகாரிகளும் கலந்துக் கொண்டனர்.

சிங்கப்பூரில் 16 வயது சிறுவனை 10 நாட்களாக காணவில்லை – பகிர்ந்து உதவுங்கள் வாசகர்களே

பின்னர் ஆர்கிட் மலருக்கு மலேசிய பிரதமரின் பெயர் சூட்டப்பட்டு கௌரவிக்கப்பட்டது. அதற்கான, சான்றிதழும் அவருக்கு வழங்கப்பட்டது.