இப்படியும் ஒரு போக்குவரத்துக் காவலர்! – மனவுளைச்சலுக்கு ஆளான சிங்கப்பூர் தம்பதியினர்

malaysia-police-bribe-singapore-couple
சிங்கப்பூர் தம்பதியினர் மலேசியப் போக்குவரத்து காவல் அதிகாரியால் ஜோகூர் பாருவில் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர்.மேலும் அவர்களை விடுவிப்பதற்கு முன்பு அபராதமாக RM500 செலுத்தும்படி கேட்டுள்ளார்.
கடந்த செப்டம்பர் 29 அன்று மாலை நான்கு மணியளவில் தம்பதியினர் தடுத்து நிறுத்தப்பட்டதாக 39 வயதான காவோ குடும்பத்தின் பெண் கூறினார்.காஸ்வேக்கு அருகில் அவர்களின் இருப்பிடம் உள்ளது.அவர்கள் வாகனத்தில் இரண்டு விளக்குகளை ஒளிரச் செய்ததாக தடுத்து நிறுத்திய காவலர் கூறினார்.
தம்பதியினர் இது வழக்கமான சோதனை என்று எண்ணியிருந்த நிலையில் அவர்களது பாஸ்போர்ட் மற்றும் ஓட்டுனர் உரிமம் போன்றவற்றை காவலர் சரிபார்த்தார்.அடிக்கடி மலேசியா வருகிறீர்களா,சாலைகள் தெரிந்திருக்கிறதா என்று அவர்களிடம் கேட்டுள்ளார்.

வாகனம் ஓட்டும் போது நேவிகேஷன் சிஸ்டத்தை இன்னும் நம்பியிருக்க வேண்டும் என்று அவளின் கணவர் கூறியுள்ளார்.அவர்கள் இரண்டு சிவப்பு விளக்குகளை இயக்கியதாகக் கூறி போக்குவரத்து போலீஸ் அதிகாரி, அந்த இடத்திலேயே RM500 (S$154) அபராதம் செலுத்தும்படி அவளது கணவரிடம் கேட்டதாகக் கூறப்படுகிறது.
அவளது கணவரிடம் இருந்த S$61 கொடுத்த பின்பு,அந்த காவலர் திடீரென அவளது கணவரின் பணப்பையை எடுத்து இரண்டு S$50 நோட்டுகளை பதிவு புத்தகத்தில் வைத்துக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.
இச்சம்பவத்திற்கு பின்னர் மனவுளைச்சலுக்கு ஆளான காவ் எதிர்காலத்தில் மலேசியாவுக்குத் திரும்பிச்செல்ல துணியவில்லை என்றும் அவரது அனுபவத்தையும் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து கொண்டார்.