மலேசிய ரிங்கிட் மதிப்பு தொடர்ந்து வீழ்ச்சி! – கச்சா எண்ணெய் விலை குறைந்ததால் ஏற்பட்ட பொருளாதாரச் சரிவு

singapore economy
மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு தொடர்ச்சியாக வீழ்ச்சியடைந்து வருகிறது.கச்சா,செம்பளை எண்ணெய் விலை குறைந்துள்ளதால் மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு மேலும் குறைந்தது.
இந்தாண்டில் நாட்டின் ஏற்றுமதிப் பொருட்களின் விலைகள் உயர்ந்த போதிலும் முதல் காலாண்டிலிருந்து நாணயத்தின் மதிப்பு தொடர்ந்து வீழ்ச்சியடைகிறது.

1990களின் இறுதியில் ஏற்பட்ட ஆசிய பொருளாதார நெருக்கடியின்போது ஏற்பட்ட நாணயத்தின் சரிவு அளவிற்கு நிலைமை செல்லக்கூடுமோ என்று பொருளாதார நிபுணர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
சில மலேசிய நிறுவனங்கள் தங்களது ஏற்றுமதி வருவாயை வெளிநாட்டு நாணயங்களில் வைத்திருப்பதாக சில முன்னணி ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

கச்சா மற்றும் செம்பளை எண்ணெய் ஆகியவற்றின் விலைகள் சமீபத்திய மாதங்களில் உச்ச விலையிலிருந்து கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளதால்,மலேசிய நாணயம் இப்போது எளிதில் பாதிக்கக்கூடிய நிலையில் உள்ளது.
அமெரிக்க டாலருக்கு நிகரான ரிங்கிட்டின் மதிப்பு 4,4810-ஐ தொட்டது.ஆசிய பொருளாதார நெருக்கடிக்குப் பிறகு மலேசிய ரிங்கிட் கண்டிருக்கும் மிகப்பெரிய சரிவு இதுவாகும்.