Omicron மாறுபாடு பற்றிய கவலை: மலேசியா-சிங்கப்பூர் இடையே VTL திட்டம் தொடருமா?

Malaysia Airports/Facebook

மலேசியா-சிங்கப்பூர் ஆகிய இரு நாடுகளுக்கும் இடையே தடுப்பூசி பயண பாதை (VTL) திட்டம் தொடரும் என்று மலாய் மெயில் செய்தி வெளியிட்டுள்ளது.

இதனை மலேசிய சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுடின் நேற்று வெள்ளிக்கிழமை, டிசம்பர் 3 அன்று தெரிவித்தார்.

மனைவி தவறான நிலையில் இருக்கும் அந்தரங்கப் படத்தை ஃபேஸ்புக்கில் வெளியிட்ட ஆடவருக்கு சிறை

சிங்கப்பூர் மற்றும் மலேசியாவில் Omicron Covid-19 மாறுபாடு கண்டறியப்பட்ட நிலையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளதாக மலாய் மெயில் கூறியுள்ளது.

செய்தியாளர் கூட்டத்தில் பேசிய அமைச்சர், சிங்கப்பூர் சுகாதார அமைச்சர் ஓங் யே குங்குடன் தொடர்பில் இருப்பதாகவும், VTL தொடர்ந்து செயல்படும் என்று மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளதாக அவர் கூறினார்.

இரு தரப்பிலும் தினசரி அடிப்படை தகவல்கள் புதுப்பிக்கப்படும் என்றும், அதற்கேற்ப நடைமுறை இருக்கும் என்றும் அவர் கூறினார்.

இருப்பினும், தரை மற்றும் வான்வழி VTL ஏற்பாடுகளின் வழியாக மலேசியாவிற்குள் நுழையும் பயணிகள், அங்கு வந்த மூன்றாவது மற்றும் ஏழாவது நாட்களில் சுய பரிசோதனை செய்ய வேண்டும் என்று பெர்னாமா தெரிவித்துள்ளது.

சிங்கப்பூரில் கடுமையாகும் கட்டுப்பாடுகள்: VTL ஏற்பாடுகளில் வரும் அனைத்து பயணிகளுக்கும் புதிய நடைமுறை