கடும் வெள்ளத்தில் சிக்கி தவிக்கும் மக்களுக்கு உதவி செய்யும் “குட்டி” தன்னார்வலர்: அசந்து போன நெட்டிசன்கள் – குவியும் பாராட்டு

boy-help-flood
@nurassyaheera/Twitter

மலேசியாவின் பல பகுதிகளில் சமீபத்தில் கடும் வெள்ளம் ஏற்பட்டது, இதில் அந்நாட்டு மக்களின் உறுதியையும் இக்கட்டான சூழலை சமாளிப்பதில் அவர்களிடம் உள்ள விடாமுயற்சியையும் காணமுடிந்தது.

கடும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிக்கரம் நீட்ட பல்வேறு தரப்பினர் ஒன்று கூடுவதாக ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

இந்த முயற்சியில் ஈடுபடும் தன்னார்வலர்கள் வெவ்வேறு இனங்கள் மற்றும் மதங்களைச் சேர்ந்தவர்கள் மட்டுமல்ல, வயதும் கூட அவர்களிடம் வித்தியாசமாக உள்ளது என்பதைக் காட்ட பல புகைப்படங்களை ட்விட்டர் பயனர் @nurassyaheera பதிவேற்றினார்.

நீர்நாய் ஒன்றைச் சுற்றி வளைத்த 9 காட்டு நாய்கள்… அடுத்து என்ன நடந்தது ? – சிங்கப்பூர் வைரல் வீடியோ

“வயது ஒரு தடையல்ல என்பதை நிரூபிக்கும் அந்த குட்டி தன்னார்வத் தொண்டருக்குப் பாராட்டுக்கள்” என்ற தலைப்புடன் அவர் அதனை பகிர்ந்துள்ளார்.

சிவப்பு நிற சட்டை, தன்னார்வக் குழுவின் சீருடை மற்றும் மஞ்சள் நிற ரப்பர் பூட்ஸ் அணிந்திருந்த அந்த சிறுவனின் பல புகைப்படங்களை அவர் ட்வீட் செய்தார்.

கடந்த டிசம்பர் 28 அன்று பதிவான அந்த ட்வீட், 6,000க்கும் மேற்பட்ட ரீட்வீட்களையும் 14,000க்கும் மேற்பட்ட விருப்பங்களையும் பெற்றுள்ளது.

அதில் ஒரு புகைப்படத்தில், குட்டி தன்னார்வலர் வெள்ளம் பாதித்த பகுதியில் இருந்து மண்வெட்டியைப் பயன்படுத்தி மண் எடுப்பதைக் காண முடிந்தது.

இந்த புகைப்படம் நெட்டிசன்கள் மத்தியில் பெரும் ஆச்சரியத்தையும், உதவி செய்யும் நோக்கத்தையும் ஏற்படுத்தியதாக கூறியுள்ளனர்.

கோவை-சிங்கப்பூர் இடையே நேரடி விமான சேவை மீண்டும் தொடக்கம் – பயணிகள் மகிழ்ச்சி!