மகிழ்ச்சியான செய்தி: கோழி ஏற்றுமதி மீதான தடையை ஓரளவு நீக்கிய மலேசியா!

singapore poultry

கோழி ஏற்றுமதி மீதான தடையை மலேசியா ஓரளவு நீக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சிங்கப்பூர் கோழி இறக்குமதியாளர்கள் இன்று (ஜூன் 14) முதல் கம்பங் மற்றும் கருப்பு கோழிகளை மீண்டும் இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஜூரோங் ஈஸ்ட்டில் தீ விபத்து: குழந்தை ஒன்று மருத்துவமனையில் அனுமதி!

நகட்ஸ் (nuggets) அல்லது ஹாட் டாக்ஸ் (hotdogs) போன்ற கோழி உணவு பொருட்களையும் மீண்டும் இறக்குமதி செய்ய அனுமதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், வணிக ரீதியாக இறக்குமதி செய்யப்படும் பிராய்லர் கோழி மீதான தடை தொடரும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஏற்றுமதியில் எவ்வளவு உயிருள்ள கம்பங் மற்றும் கருப்பு கோழிகள் இறக்குமதி செய்யப்படலாம் என்ற விவரங்கள் குறிப்பிடவில்லை.

உள்நாட்டில் போதியளவு சப்ளையை உறுதி செய்வதற்காக மலேசியா இந்த மாதம் 1ம் தேதி அன்று கோழி ஏற்றுமதிக்கு தடை விதித்தது.

தீவு முழுவதும் செயின் வழிப்பறி திருட்டு… கைவரிசை காட்டிய நபர் – ஸ்கெட்ச் போட்டு தூக்கிய போலீஸ்