மலேசிய வாகன ஓட்டிகள், சிங்கப்பூர் ஓட்டுநர் உரிமத்திற்கு மாற்றுவதற்கான ஆன்லைன் விண்ணப்பம் !

singapore road

மலேசிய வாகன ஓட்டிகள் சிங்கப்பூர் ஓட்டுநர் உரிமத்திற்கு மாற்றுவதற்கான ஆன்லைன் விண்ணப்பத்தை சமர்ப்பிக்க அனுமதிக்கும் சோதனையை ஜூலை 14 முதல்  தொடங்கியுள்ளது, சிங்கப்பூர் போக்குவரத்து காவல்துறை. போக்குவரத்து காவல்துறை தலைமையகத்தில் காத்திருக்கும் நேரத்தை குறைக்கவே இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன் மூலம் வெளிநாட்டு ஓட்டுநர்கள் தலைமையகத்திற்குச் செல்வதற்கு முன் அவர்கள்  தகுதியானவரா என்று பார்க்கப்படும். மேலும் விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பங்களை பின்வரும் இணைப்பின் மூலம் சமர்ப்பிக்க வேண்டும்.

https://go.gov.sg/fpk5f0

பின் ஆதார ஆவணங்களைச் சமர்ப்பிக்கும்படி ஒரு மின்னஞ்சலைப் பெறுவார்கள். அதன் பின் விண்ணப்பதாரர்கள் 10 வேலை நாட்களுக்குள் தங்கள் விண்ணப்பங்களின் முடிவு குறித்த பதிலைப் பெறுவார்கள்.

அனைத்து ஆவணங்களும் ஒழுங்கமைக்கப்பட்டு, சிங்கப்பூர் ஓட்டுனர் உரிமத்திற்கு மாறத் தகுதியுடைய நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்பட்டவுடன், விண்ணப்பதாரர்கள் தங்கள் ஆவணங்களுடன் போக்குவரத்து காவல்துறை தலைமையகத்திற்குச் சென்று சரிபார்ப்பதற்கும் சிங்கப்பூர் ஓட்டுனர் உரிமத்திற்கு மாற்றுவதற்கும் தேதி மற்றும் நேரம் வழங்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

போக்குவரத்து காவல்துறை தலைமையகத்திற்குச் செல்லும் முன் கவனிக்க வேண்டியவை :

  • அடிப்படைக் கோட்பாடு தேர்வான Basic Theory Test BTTஇல் சிங்கப்பூரில் உள்ள எந்த ஓட்டுநர் மையத்திலாவது தேர்ச்சி பெற வேண்டும்.
  • செல்லுபடியாகும் தகுதியான வெளிநாட்டு ஓட்டுநர் உரிமத்தை வைத்திருக்க வேண்டும். உரிமத்தின் அதிகாரப்பூர்வ மொழிபெயர்ப்பு ஆங்கிலத்தில் இல்லாவிட்டாலும் சிங்கப்பூரில் பதிவுசெய்யப்பட்ட மொழிபெயர்ப்பு நிறுவனத்தால் செய்யப்பட்டிருக்க வேண்டும்.
  • வெளிநாட்டு ஓட்டுநர் உரிமத்தின் date of first issue மற்றும் date of expiry ஆகியவற்றைக் குறிக்கும் ஓட்டுநர் உரிமப் பதிவின் சாற்றை வைத்திருக்க வேண்டும்,
  • செல்லுபடியாகும் சர்வதேச ஓட்டுநர் அனுமதியான International Driving Permit IDPஐ வைத்திருக்கவும்.