மரண தண்டனை பெற்ற 20க்கும் மேற்பட்ட குற்றாவளிகளுக்கு மாற்று தண்டனை – மலேசியா அதிரடி

வெளிநாட்டு ஊழியருக்கு சிறை

மரண தண்டனை வழங்குவதற்கு பதிலாக சுமார் 23 குற்றங்களுக்கு மாற்று தண்டனையை வழங்க மலேசிய அரசாங்கம் ஒப்புக்கொண்டுள்ளதாக Malaysiakini தெரிவித்துள்ளது.

அந்த குற்றங்களில் ஒன்று மலேசியாவின் கடும் போதைப்பொருள் சட்டம் 1952 ஆகும். அதன்கீழ் கட்டாய மரண தண்டனையை விதிக்கப்படுகிறது.

சிங்கப்பூரில் வாரத்துக்கு 4 நாள் வேலையா?? ஊழியர்களின் தேவை அதிகரிக்கும்.. ஆனால் சம்பளம் குறையும் என அச்சம்

அதே போல, தற்போது மரண தண்டனையில் உள்ள 1,337 கைதிகளின் மரணதண்டனைக்கு தற்காலிமாக தடை விதிக்க மலேசிய அரசாங்கம் ஒப்புக் கொண்டுள்ளது.

கடந்த செப். 6 மற்றும் செப். 13 ஆகிய தேதிகளில் நாடாளுமன்றம் மற்றும் சட்டத்திற்கான பிரதமர் துறை அமைச்சர் வான் ஜுனைடி துவாங்கு ஜாபர் தலைமையில் நடந்த இரண்டு கூட்டங்களுக்குப் பிறகு இந்த முடிவுகள் எடுக்கப்பட்டன.

பணிப்பெண்ணின் தரங்கெட்ட செயல்: கழிவறையில் ஆண்களுடன் வீடியோ கால்… நிர்வாண போட்டோ – புகார் செய்த முதலாளி