தீபாவளி பண்டிகையை முன்னிட்டு முறுக்கு சுடும் இயந்திரத்தை கண்டுபிடித்து மலேசியர் அசத்தல்..!!

Malaysian man invents muruku machine ahead of Deepavali

தீபாவளியை பண்டிகை நெருங்கி வருகிறது. இதனை முன்னிட்டு மலேசியர் ஆர்.லிங்கம் என்பவர் முறுக்கு சுடும் இயந்திரத்தை கண்டுபிடித்துள்ளார்.

மலேசிய ஈப்போ நகரத்தை சேர்ந்த லிங்கம், கண்டுபிடித்த இந்த இயந்திரம் இரண்டு நிமிடங்களில் சுமார் 60 முறுக்குகளை வெளியேற்றக்கூடிய திறன் கொண்டது. நமது வேலையை மிகவும் எளிதாக கூடிய வகையில் அவர் இதனை உருவாக்கியுள்ளார்.

இதனை வடிவமைக்க பல மாதங்கள் அவர் எடுத்துக் கொண்டதாக மலேசிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. மேலும், இதை முழுமையாக்குவதற்கு சுமார் RM8,000 (S$ 2,600) பொருட்செலவு ஆனதாகவும் கூறப்படுகிறது.