சிங்கப்பூர் Bukom தீவில் சுமார் 59 மில்லியன் வெள்ளி மதிப்புள்ள எரிபொருள் திருட்டு; குற்றத்தை ஒப்புக்கொண்ட ஆடவர்!

சிங்கப்பூரில் கடந்த 2014 – 2016ம் ஆண்டுக்கு இடையில் புக்கோம் (Bukom) தீவில் அமைந்துள்ள ஷெல் ஈஸ்டர்ன் (Shell Eastern) பெட்ரோலியம் நிறுவனத்துக்கு சொந்தமான எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து சுமார் 59 மில்லியன் வெள்ளிக்கும் அதிகமான எரிபொருள் திருடப்பட்டதில் தொடர்புடைய ஆடவர் ஒருவர் குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

இந்த மிகப்பெரிய திருட்டில் ஈடுபட்டதன் மூலம் ரஷீது என்ற அந்த ஆடவர் சுமார் 7,35,000 வெள்ளிக்கும் அதிகமான தொகையை ஈட்டியதாக கூறப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் நாட்டு வெடிகுண்டு தயாரித்த 19 வயதான இரு ஆடவர்கள் மீது குற்றச்சாட்டு!

ஷெல் ஈஸ்டர்ன் பெட்ரோலியம் நிறுவனத்துக்கு சொந்தமான எண்ணெய்ச் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து எரிபொருள் திருட்டு தொடர்பில் சுமத்தப்பட்ட 13 நம்பிக்கை துரோகக் குற்றச்சாட்டுகளை நேற்று (மார்ச் 29) நீதிமன்றத்தில் அந்த ஆடவர் ஒப்புக் கொண்டார்.

இதுமட்டுமின்றி, இந்த குற்றச்செயலின் மூலம் ஈட்டிய 2,70,000 வெள்ளியைக் கையாண்டது தொடர்பான 4 குற்றச்சாட்டுகளையும், போதைப்பொருள் பயன்படுத்தியது தொடர்பான ஒரு குற்றச்சாட்டையும் நீதிமன்றத்தில் ஆடவர் ஒப்புக்கொண்டார்.

மேலும், வரும் மே மாதம் 26ம் தேதி அவருக்கு தண்டனை விதிக்கும்போது கூடுதலாக 25 குற்றச்சாட்டுகள் கருத்தில் கொள்ளப்படும் என நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சிங்கப்பூரில் காணாமல் போன நபர்… லாசரஸ் தீவில் சடலம் கண்டெடுப்பு!