போதைப்பொருள் கடத்தல் மற்றும் 2 விபத்துகளை ஏற்படுத்தி தப்பிய குற்றவாளி கைது !

Man arrested over 2 hit-and-run accidents, charged with drug trafficking

சந்தேகத்திற்கிடமான இரண்டு விபத்துக்களில் ஈடுபட்டதாக 37 வயதான ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கூடுதலாக போதைப்பொருள் கடத்தல் குற்றச்சாட்டு (நவ. 9) அந்த நபர் மீது சுமத்தப்பட்டுள்ளது.

சிங்கப்பூர் போலீஸ் படை மற்றும் மத்திய போதைப்பொருள் பணியகம் (CNB) கூட்டு செய்தி வெளியீட்டில், கடந்த புதன்கிழமை காலை இந்த விபத்துக்கள் குறித்து போலீசாருக்கு தகவல் கிடைத்ததாக கூறியுள்ளனர்.

இந்த விபத்தில் சம்பந்தப்பட்ட கார் முதலில் கெய்லாங் பஹ்ரு சாலையில் பெண்டிமீர் சாலையை நோக்கி சென்றுகொண்டிருந்த ஒரு டாக்ஸியைத் மோதியுள்ளது, பின்னர் பிளாக் 22 செயின்ட் ஜார்ஜ் சாலை அருகே நிறுத்தப்பட்டிருந்த கார் மீதும் மோதியுள்ளது.

இதனை அடுத்து, இரண்டாவது விபத்தை ஏற்படுத்திய பிறகு, ஓட்டுநர் காரைக் கைவிட்டு தப்பி ஓடிவிட்டதாக கூறப்படுகிறது. இரண்டு விபத்துக்கள் தொடர்பாக ஒரு நபரைத் போலீசார் தேடி வந்தனர்.

மத்திய போலீஸ் பிரிவு மற்றும் சி.என்.பி அதிகாரிகள் இறுதியில் சந்தேகத்திற்கிடமான நபரை விசாரனை மற்றும் சி.சி.டி.வி காட்சிகள் மூலம் அடையாளம் கண்டு, அவரை வெள்ளிக்கிழமை சிங் ஜூ Sing Joo Walk-ல் கைது செய்தனர்.

Sing Joo Walk-ல் சோதனை செய்ததில் சந்தேகத்திற்கிடமான சில மருந்துகள் அவர் வைத்திருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.

இந்நிலையில், அவர் கைது செய்யப்பட்டபோது உடல்நிலை சரியில்லாமல் இருந்ததாகவும், சாங்கி பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும், அங்கு அவரது உடல்நிலை சரியானதாகவும், போலீசார் தெரிவித்துள்ளனர்.

A கிளாஸ் கட்டுப்படுத்தப்பட்ட போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக அவர் சனிக்கிழமை மருத்துவமனையில் குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.

இது குறித்த விசாரனைகள் தொடர்ந்து நடந்து வருகின்றன.