ஆணிடம் தவறாக நடந்த இன்னொரு ஆடவர்… கேமரா உதவியுடன் கைது செய்த போலீஸ் – பிரம்படி கிடைக்கலாம்?

வெளிநாட்டு ஊழியரை

இளையர் ஒருவரிடம் தகாத முறையில் நடந்துகொண்ட சந்தேகத்தின் பேரில் ஆடவர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

பிளாக் 52 மரைன் டெரஸ் அருகே நடந்த இந்த சம்பவத்தில், 14 வயது சிறுவன் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

வெளிநாட்டு ஊழியரை மகனாக ஏற்றுக்கொண்ட சிங்கப்பூர் பெண்… ஊழியரின் அளவில்லா பாசத்துக்கு கிடைத்த வெற்றி

மேலும் இந்த சம்பவம் குறித்து நேற்று முன்தினம் ஜூலை 2ம் தேதி காலை 11:30 மணியளவில் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

சிசிடிவி காட்சிகள் மற்றும் போலீஸ் கேமரா உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் மூலம் அந்த நபரின் அடையாளம் காணப்பட்டது.

அதன் பின்னர் 47 வயதுடைய அந்த ஆடவர் கைது செய்யப்பட்டார், அதாவது புகாரளிக்கப்பட்ட நான்கு மணி நேரத்திற்குள் அவர் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், அந்த தகாத செயலுக்காக இன்று (ஜூலை 4) அவர் மீது குற்றம் சாட்டப்படவுள்ளது.

குற்றம் நிரூபிக்கப்பட்டால், இரண்டு முதல் 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும், பிரம்படியும் விதிக்கப்படலாம்.

சிங்கப்பூரின் முக்கிய செய்திகளை உடனே அறிய Tamil Micset வாட்ஸ்ஆப் குழுவில் இணையுங்கள் – கிளிக் செய்யுங்கள்

சிங்கப்பூரில் புதிய வேலை அனுமதி விண்ணப்பங்கள் – செப்டம்பர் 1 முதல் இது கட்டாயம்