லிட்டில் இந்தியாவில் சட்டவிரோத செயலில் ஈடுபட்ட இருவர் கைது..!!

Man arrested over launch of illegal fireworks in Little India

லிட்டில் இந்தியாவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை 43 வயதான ஒருவர் சட்டவிரோதமாக பட்டாசுகளை வெடித்ததன் சந்தேகத்தின்பேரில் நேற்று (அக்டோபர் 31) கைது செய்யப்பட்டார். இந்தக் குற்றத்திற்காக 2 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது $2,000 முதல் $10,000 வரை அபராதம் அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம் என சிங்கப்பூர் போலீசார் கூறியதாக சிங்கப்பூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

அதே போல் ஜூரோங்கில் சட்டவிரோத வாண வேடிக்கை பட்டாசுகளை வெடித்த சந்தேகத்தின் பேரில் 38 வயது நிரம்பியவர் கைது செய்யப்பட்டார். இந்த வாணவேடிக்கை காணொளி 23 விநாடி முகநூலில் பதிவேற்றம் செய்யப்பட்டது.

இந்நிலையில், ஆபத்தான வாண வேடிக்கை பட்டாசுகளையும் வைத்திருப்பதும், மேலும் அவற்றை விற்பது, வேறொரு இடத்திற்கு எடுத்துச்செல்வது, அனுப்புதல், விநியோகிப்பது அல்லது இறக்குமதி செய்வது குற்றம் என போலீசார் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும், “மற்றவர்களின் உயிருக்கு அல்லது பாதுகாப்புக்கு ஆபத்தையும், பொதுமக்களுக்குத் தேவையற்ற பீதியையும் உண்டாக்கும் இதுபோன்ற செயல்கள் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும். சட்டத்தைப் மீறுவோருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க ஒருபோதும் தயங்க மாட்டோம்,” என்றும் போலிசார் தெரிவித்துள்ளனர்.