“மக்களைக் கொல்ல போறேன்” என போன் காலில் மிரட்டிய ஆடவர்: பெரிய ஆயுதத்துடன் கைது – சிறை!

woodlands-waterfront-park-man-chopper
Titus Soh Eng Ghee/FB

ஆடவர் ஒருவர் மனநலக் கழகத்தின் (IMH) தனது வழக்கு தொடர்பான அதிகாரியை தொடர்புகொண்டு தாம் மக்களைக் கொல்ல விரும்புவதாகக் கடந்த ஜன.13 அன்று கூறியுள்ளார்.

இதை கேட்டு அதிர்ச்சியடைந்த அந்த அதிகாரி, பின்னர் இதுகுறித்து காவல்துறையில் புகார் செய்தார்.

சிங்கப்பூர் சாலைகளில் மேலாடையின்றி ஓடிய ஆடவர்: வளைத்து பிடித்த போலீஸ்!

அதனை தொடர்ந்து, அதிகாரியை தொடர்பு கொண்ட அந்த 22 வயது ஆடவரை தீவு முழுவதும் போலீசார் தேட தொடங்கினர்.

இறுதியில் அந்த ஆடவர் பெரிய ஆயுதத்துடன் உட்லண்ட்ஸ் வாட்டர்ஃபிரண்ட் பூங்காவில் அன்று மாலை வேளையில் கண்டுபிடிக்கப்பட்டார்.

அவர், பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் ஒரு குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டதாகவும், மேலும் காயத்தை ஏற்படுத்தும் வகையில் ஆயுதத்தை வைத்திருந்ததற்காகவும் குற்றம் நிரூபிக்கப்பட்டது.

இந்நிலையில், அவருக்கு நேற்று முன்தினம் மார்ச் 15 அன்று 21 வாரங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

ஆழமான வடிகாலில் விழுந்த சிங்கப்பூர் பெண்ணின் AirPod: கனமழையிலும் ஓடிச்சென்று உதவிய “வெளிநாட்டு ஊழியர்”!