சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியரை தாக்கியவருக்கு சிறைத்தண்டனை!

Photo: Getty

வெளிநாட்டு ஊழியரை தாக்கியதாக முன்னாள் நடிகர் இங் ஐக் லியோங்-க்கு 10 மாத சிறைத்தண்டனை நேற்று (பிப். 26) விதிக்கப்பட்டுள்ளது.

2018ஆம் ஆண்டு, சிங்கப்பூர் இஸ்லாமிய மையத்தில் பங்களாதேஷ் ஊழியரை 59 வயதான இங் தாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

தொடர்ந்து துன்புறுத்திய முதலாளி… பணம் இல்லாமல் தப்பி சென்ற வெளிநாட்டு பணிப்பெண்!

அதை அடுத்து, கடந்த மாதம் இங் மீது தானாக முன்வந்து ஆயுதத்தால் காயம் ஏற்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டது.

பாதிக்கப்பட்ட ஊழியருக்கு S$3,300 இழப்பீடு வழங்கவும் உத்தரவிடப்பட்டது. பணம் செலுத்தவில்லை என்றால், அவர் மேலும் மூன்று வார சிறை தண்டனை அனுபவிக்க வேண்டியிருக்கும்.

பங்களாதேஷ் ஊழியர் திரு ஜாகிதுல், கடந்த 2018ஆம் ஆண்டு டிசம்பர் 11 அன்று இஸ்லாமிய மையத்தில் பணியாற்றிக்கொண்டிருக்கும் போது, இங் தாக்கியதாக கூறப்படுகிறது.

தாம் ஊழியரை தாக்கவில்லை என்றும், தாக்குவதை போல தாம் நடித்து பாவனை செய்ததாகவும், இங் விசாரணையில் தெரிவித்தார்.

ஆனால், இங்கின் அந்த கூற்றுக்கு பங்களாதேஷ் ஊழியர் மறுப்பு தெரிவித்தார்.

பின்னர், அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணையில் சாட்சியங்கள் அடிப்படையில் இங் குற்றவாளி என உறுதி செய்யப்பட்டது.

உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் 25 வயதுக்கு உட்பட்ட 10 பேருக்கு தடுப்புக்காவல்