சிங்கப்பூர் சாலையோரத்தில் படுத்த படுக்கையாக கிடக்கும் நபரை போட்டு “உதைத்து தாக்கும்” ஆடவர் – போலீஸ் விசாரணை

Man attacking another lying man singapore police
Stomp

சிம்ஸ் அவென்யூவில் ஆடவர் ஒருவரை இன்னொருவர் திரும்ப திரும்ப உதைத்து தாக்கும் சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த புதன்கிழமை (மார்ச் 16) இரவு 9 மணியளவில் நடந்த இந்த சம்பவத்தை நேரில் பார்த்த ஒருவர் வீடியோ எடுத்துள்ளார்.

தடுப்பூசி போட்டுக்கொண்ட “இந்திய பயணிகளுக்கு தனிமை இல்லா” பயணம் – விமான சேவை குறித்த முழுமையான விவரம்!

அந்த வீடியோவில், சாலையோர நடைபாதையில் படுத்த படுக்கையாக கிடக்கும் ஆடவர் ஒருவரை, மற்றொரு ஆடவர் பல முறை உதைத்து தாக்குகிறார்.

அப்போது அந்த ஆடவரை பொதுமக்கள் தடுக்க முயற்சிப்பதையும் வீடியோவில் காணலாம்.

“இது கொஞ்சம் பயமாக இருந்தது, அதனால் நான் விலகிச் சென்றேன், பின்னர் என்ன நடந்தது என்று தெரியவில்லை ” என ஸ்டாம்ப் வாசகர் கூறியுள்ளார்.

அன்று இரவு 9.10 மணியளவில் உதவி வேண்டி புகார் கிடைத்ததாக போலீசார் தெரிவித்தனர்.

இந்த சம்பவத்தில் 52 வயதான ஆடவருக்கு சிறிய காயங்கள் ஏற்பட்டன.

இந்நிலையில், 47 வயதான ஆடவரை பிடித்த போலீஸ் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்திய பயணிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி! – இந்தியாவின் அனைத்து நகரங்களில் இருந்தும் சிங்கப்பூருக்கு தனிமை இல்லா சேவை!