சிங்கப்பூரில் தனியார் நிறுவன வாடிக்கையாளரை ஏமாற்றிய ஆடவர் மீது குற்றச்சாட்டு!

Pic: MYDIGITALLOCK/FB

சிங்கப்பூரில் கடந்த ஜனவரி மாதம் 3ம் தேதியிலிருந்து 24ம் தேதி வரை My Digital Lock என்ற நிறுவனத்தின் வங்கிக் கணக்கிற்கு பணம் அனுப்புவதாக கூறி பெண் ஒருவரை ஏமாற்றிய ஆடவர் மீது குற்றச்சாட்டப்பட்டுள்ளது.

டிராவிஸ் ஆவ் ஜின் யுவான் என்ற 22 வயது ஆடவர் அப்பெண்ணை ஏமாற்றி அவரிடமிருந்து $6,153 பறித்ததாக மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் மது பாட்டிலை கொண்டு நடந்து சென்ற ஆடவர் மீது தாக்குதல்; 4 பேர் மீது குற்றச்சாட்டு!

மின்னிலக்கப் பூட்டு, மெத்தை, கட்டில் தலையணைகள் ஆகியவற்றை வாங்குவதற்கு அதற்கான பணத்தை வங்கிக் கணக்கிற்கு அந்த பெண் அனுப்பியுள்ளார். ஆனால், டிராவிஸ் அப்பெண்ணை நம்பவைத்து ஏமாற்றியதாக நீதிமன்ற ஆவணங்கள் தெரிவிக்கின்றன.

சட்டவிரோத கும்பல் ஒன்றின் உறுப்பினராக இருந்தது, கலகத்தில் ஈடுபட்டது ஆகிய குற்றச்சாட்டுகளை அந்த ஆடவர் எதிர்நோக்குகிறார். தற்போது அவர் $20,000 பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். இந்த மாதம் 8ம் தேதி மீண்டும் அவர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

பல நபர்களை ஏமாற்றி Pay Now தளம் மூலம் ஏறத்தாழ $94,000 பறித்த குற்றத்துக்காக கடந்த வியாழக்கிழமை அன்று அவர் கைது செய்யப்பட்டார். மேலும் இதுபோல பல மோசடிகளில் அவர் ஈடுபட்டிருப்பதாக ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக காவல்துறை கூறியுள்ளது.

வெளிநாட்டு ஊழியர்களின் எண்ணிக்கை… ஆண்டின் நடுப்பகுதியில் முந்தைய நிலைகளை எட்டும்!